தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/முதுமையை வாட்டும் மூட்டுவலியும் தசை பலவீனமும்

முதுமையை வாட்டும் மூட்டுவலியும் தசை பலவீனமும்

முதுமையை வாட்டும் மூட்டுவலியும் தசை பலவீனமும்


UPDATED : நவ 21, 2026 01:18 PM

ADDED : நவ 21, 2026 01:16 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 21, 2026 01:18 PM ADDED : நவ 21, 2026 01:16 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கோவை: வயதானவர்கள் பலரும் சிறிது தூரம் செல்வதற்கு கூட, மிக மெதுவாக, சிறிய அடிகளை எடுத்து வைத்து நடக்கின்றனர். இதற்கு, மூட்டுவலியும், தசை பலவீனமுமே காரணம்.

இந்த வலியில் இருந்து தப்பிக்க என்ன தான் வழி என, ஓய்வு பெற்ற அரசு மருத்துவமனை முடநீக்கியல் மற்றும் எலும்பியல் துறை தலைவர் டாக்டர் வெற்றிவேல்செழியனிடம் கேட்டோம்.

அவர் நம்மிடம் பகிர்ந்தவை:

முதியவர்கள் மெதுவாகவும், கால் சற்று வளைந்தும் நடப்பதற்கு இரண்டு முக்கியக் காரணங்கள் உள்ளன. ஒன்று வயதாகும்போது மூட்டுகளில் ஏற்படும் தேய்மானம். இதனால், கால்கள் நேராக இருக்காமல் சற்று வளைய தொடங்கும். நடக்கும்போது உடலுக்கு தேவையான நிலைத்தன்மை கிடைக்காது.

இரண்டாவது, தசை பலவீனம். வயது அதிகரிக்கும்போது உடலின் அனைத்து செல்களும், தசைகளும், தசைநார்களும் இயற்கையாகவே சுருங்கி வலுவிழக்க தொடங்கும். குறிப்பாக இடுப்பு மற்றும் முதுகு பகுதி தசைகளின் பலம் குறையும்போது, கால்களை நேராக முன்னோக்கி எடுத்து வைக்க முடியாது. உடலை பக்கவாட்டில் சாய்த்து நடக்க வேண்டிய சூழல் ஏற்படும்.

இதனால்தான் சிலருக்கு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்த பிறகும், தசைகளில் போதிய பலம் இல்லாத காரணத்தால் இயல்பாக நடப்பதில் சிரமம் நீடிக்கிறது.

உணவே மருந்து



முதுமை காரணமாக ஏற்படும் இப்பிரச்னைகளுக்கு நிரந்தர தீர்வு, உணவு, உடற்பயிற்சி, மருந்துவ சிகிச்சை ஆகிய மூன்றும் இணையும் போது தான் கிடைக்கும்.

மூட்டு மற்றும் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு உணவு முறை மிக முக்கிய பங்கு வகிக்கிறது. வாரம் ஒருமுறை பிரண்டையை துவையலாகவோ அல்லது உணவிலோ சேர்த்து கொள்வது எலும்புகளுக்கு மிகுந்த பலம் தரும்.

இரும்புச்சத்து நிறைந்த முருங்கை கீரை மற்றும் கால்சியம் சத்து அதிகம் உள்ள ராகி உள்ளிட்ட சிறுதானியங்களை உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். சீசன் காலங்களில் கிடைக்கும் பனங்கிழங்கு மூட்டுகளுக்கு நல்ல வலுவை கொடுக்கும்.

மனநிலை முக்கியம்



காய்ச்சல், தலைவலி போல ஒரே மாத்திரையில், மூட்டு வலியை முழுமையாக குணப்படுத்திவிட முடியாது. வயதிற்கேற்ற மாற்றங்களை ஏற்றுக்கொண்டு, நேர்மறையான எண்ணத்துடன், எளிய உடற்பயிற்சிகள் மற்றும் சத்தான உணவுகள் மூலம், வலியை கட்டுக்குள் வைத்துக்கொள்வது அவசியம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

வாரம் ஒருமுறை பிரண்டையை துவையலாகவோ அல்லது உணவிலோ சேர்த்து கொள்வது எலும்புகளுக்கு மிகுந்த பலம் தரும். இரும்புச்சத்து நிறைந்த முருங்கை கீரை மற்றும் கால்சியம் சத்து அதிகம் உள்ள ராகி உள்ளிட்ட சிறுதானியங்களை உணவில் சேர்த்து கொள்ள வேண்டும்.

வலியை குறைக்க இதோ வழி!


‘‘ஏற்கனவே மூட்டு வலி உள்ளவர்கள், மருந்து மாத்திரைகளை மட்டுமே நம்பி அடிமையாகிவிட கூடாது. மாத்திரைகள் தற்காலிக தீர்வை மட்டுமே தரும். தசைகளை வலுப்படுத்துவதே நிரந்தர தீர்வாகும்.
இதற்கு, தரையில் அல்லது படுக்கையில் கால்களை நீட்டி அமர்ந்து கொண்டு அல்லது படுத்து கொண்டு, முட்டியை கீழ்நோக்கி அழுத்த வேண்டும். இவ்வாறு செய்யும்போது தொடை பகுதி தசைகள் இறுக்கமடையும்.
இதை தினமும் 10 முறை செய்து வந்தால், மூட்டு சுற்றியுள்ள பகுதிகளில் ரத்த ஓட்டம் அதிகரிக்கும். வலியை ஏற்படுத்தும் வேதிப்பொருட்கள் வெளியேறி, வலி கணிசமாக குறையும்; கால்கள் கோணலாவதும் தடுக்கப்படும்’’ என்றார் டாக்டர் வெற்றிவேல் செழியன்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us