ADDED : செப் 29, 2026 02:41 PM
கோவை: கிருஷ்ணகிரி விளையாட்டு வளாகத்தில், செப்.25 முதல் அக்.7 வரை அக்னிவீர் ஆட்சேர்ப்பு பேரணி நடக்கிறது.
ராணுவ ஆட்சேர்ப்பு அலுவலகம் சார்பில் நடக்கும் இப்பேரணியில், ஆன்லைன் பொது நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள், அக்னிவீர் கிளார்க், பொதுப்பணிப்பிரிவு, தொழில்நுட்பப்பிரிவு, 10 மற்றும் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கான டிரேட்ஸ்மேன், மகளிர் ராணுவ காவல்படை உள்ளிட்ட பிரிவுகளுக்கு தேர்வு செய்யப்பட உள்ளனர்.
தேர்வுக்கு வருபவர்கள், www.joinindianarmy.com இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள ஆட்சேர்ப்பு அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து அசல் ஆவணங்களையும் தவறாமல் கொண்டு வர வேண்டும்.
ஏற்கனவே விண்ணப்பித்தவர்கள், விண்ணப்பத்தின்போது பதிவு செய்த மின்னஞ்சல் முகவரியை தொடர்ந்து சரிபார்த்து, ஆட்சேர்ப்பு தொடர்பான அறிவிப்புகளை தெரிந்து கொள்ளலாம்.
ஆட்சேர்ப்பு நடைமுறை தானியங்கி முறை என்பதால், இடைத்தரகர்களை நம்பி ஏமாற வேண்டாம் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
