ADDED : ஆக 30, 2026 08:44 AM

கோவை: தொழில் மற்றும் கல்வித்துறை இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்தும் வகையில், தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லுாரி மற்றும் கிரேவ்யா டெக்னாலஜிஸ் நிறுவனத்துக்கு இடையே, புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
கல்லுாரியின் ஐ.க்யு.ஏ.சி., மற்றும் மேலாண்மைத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கிரேவ்யா டெக்னாலஜிஸ் நிறுவன கவின், கல்லுாரி முதல்வர் ஜெகதீசன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
ஒப்பந்தத்தின் மூலம் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் நவீன தொழில்துறை நடைமுறைகள், தொழில்முறைத் தேவைகள் மற்றும் வளர்ந்து வரும் வேலைவாய்ப்புகள் குறித்து நேரடி அனுபவம் பெறுவதற்கான வாய்ப்புகள் ஏற்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது.
கல்லுாரியின் கல்விப் பிரிவு டீன் பாகீரதி, எம்.பி.ஏ., டீன் கிருஷ்ணவேணி, எம்.பி.ஏ., துறை பேராசிரியர் ஜாபர்சதிக் பங்கேற்றனர்.
