sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 13, 2025 ,கார்த்திகை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

ஈஷா மண் காப்போம் சார்பில் அக்ரி ஸ்டார்ட் அப் திருவிழா!

/

ஈஷா மண் காப்போம் சார்பில் அக்ரி ஸ்டார்ட் அப் திருவிழா!

ஈஷா மண் காப்போம் சார்பில் அக்ரி ஸ்டார்ட் அப் திருவிழா!

ஈஷா மண் காப்போம் சார்பில் அக்ரி ஸ்டார்ட் அப் திருவிழா!


ADDED : ஆக 11, 2024 01:14 PM

Google News

ADDED : ஆக 11, 2024 01:14 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈஷா மண் காப்போம் இயக்கம் சார்பில் வேளாண் தொழில் முனைவோர்களுக்கான 'அக்ரி ஸ்டார்ட் அப் திருவிழா' எனும் மாபெரும் பயிற்சி கருத்தரங்கு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சி கோவை சின்னியம்பாளையம் பிருந்தாவன் ஆடிட்டோரியத்தில் வரும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி நடைபெற இருக்கிறது.

இது தொடர்பான பத்திரிக்கையாளர் சந்திப்பு கோவை பிரஸ் கிளப்பில் இன்று (08/08/2024) நடைப்பெற்றது. இதில் மண் காப்போம் இயக்கத்தின் கள ஒருங்கிணைப்பாளர் திரு. முத்துக்குமார் பங்கேற்றுப் பேசினார். அவருடன் கோவை பிவிஆர் பூட்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் திருமதி. சுபத்ரா மற்றும் குமார் சண்முகம் ஆகியோர் உடன் இருந்தனர்.

இந்நிகழ்ச்சி குறித்து முத்துக்குமார் அவர்கள் பேசியதாவது, 'ஈஷா மண் காப்போம் சார்பில் கடந்த பல ஆண்டுகளாக, இயற்கை விவசாயம் குறித்த பல்வேறு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு உள்ளது. இதன் மூலம் ஆயிரக்கணக்கான விவசாயிகள் இயற்கை விவசாயத்திற்கு திரும்பி வெற்றிகரமாக விவசாயம் செய்து வருகின்றனர்.

இன்றைய சூழலில் விவசாயிகள் ஒரு சுய தொழில் துவங்கி தொழிலதிபராக மாறும் வாய்ப்பு இருக்கிறது. இந்த வாய்ப்பு விவசாயிகளுக்கு மட்டும் இல்லாமல் இளைஞர்கள், பெண்கள் இல்லத்தரசிகள் என அனைவருக்கும் இருக்கிறது.

இன்று நம் நாட்டின் மொத்த ஜிடிபி உற்பத்தில் 30 - 40 சதவீதம் சிறு குறு நிறுவனங்களில் இருந்து தான் வருகிறது. அதிலும் குறிப்பாக விவசாயம் சார்ந்த தொழில் முக்கியத்துவம் பெறுகிறது. இதனால் தான் ஈஷா மண் காப்போம் இயக்கம் அக்ரி ஸ்டார்ட் அப் திருவிழாவை நடத்துகிறது.

இந்த நிகழ்ச்சியில் எவ்வாறு விவசாயம் சார்ந்த தொழில் துவங்குவது, அதனை பிராண்டிங் செய்வது குறித்த யுக்திகள், பொருட்களை பேக்கிங் செய்வதில் உள்ள தொழில்நுட்பங்கள், எவ்வாறு சந்தைப்படுத்துவது மற்றும் சமூக வலைதளங்களை முறையாக பயன்படுத்திக் கொள்வது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து துறைசார் வல்லுநர்கள் தங்களின் அனுபவங்களையும், முக்கியத் தகவல்களையும் பகிர்ந்து கொள்ள உள்ளனர். மேலும் விவசாயம் சார்ந்து தொழில் துவங்க அரசு சார்பில் என்ன மாதிரியான உதவித் திட்டங்கள் இருக்கின்றது என்பது குறித்தும் இந்த நிகழ்ச்சியில் நிபுணர்கள் பகிர்ந்து கொள்ள உள்ளனர்.

குறிப்பாக வேளாண் வணிக வாய்ப்புகள் குறித்து தமிழ்நாடு வேளாண் கல்லூரியின் வணிக மேம்பாடு துறையின் நிர்வாக இயக்குனரும், தலைமை செயல் அலுவலருமான திரு.ஞானசம்பந்தம் அவர்கள் பேச உள்ளார். மேலும் சிறுதானியங்கள் மூலம் கோடிகளில் வருமானம் ஈட்டும் பிவிஆர் பூட்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் சுபத்ரா, இதுவரை 17,000 தொழில் முனைவோர்களை உருவாக்கி சாதனை படைத்துள்ள S.K. பாபு உள்ளிட்ட பல்வேறு சாதனையாளர்களும், நிபுணர்களும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பயனுள்ள தலைப்புகளில் தங்களின் அனுபவங்களை பகிர்ந்து கொள்ள இருக்கிறார்கள்.

மேலும் சிறப்பாக செயல்படும் 10 தொழில் முனைவோர்களை தேர்ந்தெடுத்து விருது வழங்க இருக்கிறோம். அது மட்டுமின்றி தொழிலில் பயன்படும் எளிமையான சிறு கருவிகள், பேக்கிங்கில் பயன்படும் சாதனங்களின் கண்காட்சி நடைபெற உள்ளது.' என அவர் கூறினார்.அடுத்து பிவிஆர் பூட்ஸ் சுபத்ரா அவர்கள் பேசுகையில், 'ஒரு கல்லூரி பேராசிரியராக இருந்த நான் இன்று உணவுத் துறையில் சிறுதானியங்களை மதிப்பு கூட்டி விற்பனை செய்யும் தொழிலில் ஈடுபட்டு வருகிறேன். நான் துவங்கிய போது இந்த மாதிரி வழிகாட்டுதல்கள் இல்லை. ஆனால் இன்று ஈஷா மண் காப்போம் இயக்கம் நடத்த இருக்கும் இந்த நிகழ்ச்சியின் மூலம் என்னை போன்ற பலரின் அனுபவங்களை ஒரே இடத்தில் ஒருங்கிணைத்து தர முடியும். மக்கள் இதனை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்' எனக் கூறினார்.

இந்நிகழ்ச்சி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை ஒரு முழு நாள் நிகழ்ச்சியாக நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க விரும்புவோர் 83000 93777, 94425 90077 ஆகிய எண்களை தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம்.






      Dinamalar
      Follow us