/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மானியத்தில் கோடை உழவு செய்யலாம் வாங்க விவசாயிகளுக்கு வேளாண் துறை அழைப்பு
/
மானியத்தில் கோடை உழவு செய்யலாம் வாங்க விவசாயிகளுக்கு வேளாண் துறை அழைப்பு
மானியத்தில் கோடை உழவு செய்யலாம் வாங்க விவசாயிகளுக்கு வேளாண் துறை அழைப்பு
மானியத்தில் கோடை உழவு செய்யலாம் வாங்க விவசாயிகளுக்கு வேளாண் துறை அழைப்பு
ADDED : மே 07, 2025 01:09 AM
தொண்டாமுத்தூர்,: தொண்டாமுத்தூர் வட்டாரத்தில் உள்ள விவசாயிகள், மானியத்தில், மானாவாரி நிலங்களில் கோடை உழவு செய்ய, வேளாண்மை துறையினர் அழைப்பு விடுத்துள்ளனர்.
இதுகுறித்து தொண்டாமுத்தூர் வட்டார வேளாண்மை துறை உதவி இயக்குனர் சக்திவேல் கூறியதாவது:
கோடை உழவு செய்வதினால், மேல்மண் துகளாகி, நிலத்தில் நீர் இறங்கும் திறன் அதிகரிக்கிறது. அதோடு, ஒருங்கிணைந்த பூச்சி நோய் மேலாண்மையில், கோடை உழவின் பங்கு மிக முக்கியமானது. முக்கியமாக, மக்காச்சோளம் பயிரை தாக்கும் படைப்புழுவினை கட்டுப்படுத்தும்.
எனவே, தொண்டாமுத்தூர் வட்டாரத்தில், மாநில வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ், 2025--26ம் நிதியாண்டில், மானாவாரி நிலங்களில் கோடை உழவு செய்வதை, ஊக்குவிக்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
இத்திட்டத்தின் முக்கிய நோக்கம், காரீப் பருவத்தில், மானாவாரி நிலங்களில் தானிய பயிர்களான சோளம், மக்காச்சோளம், கம்பு, எள், நிலக்கடலை, உளுந்து, தட்டை, துவரை, பாசிப்பயறு போன்ற பயிர் சாகுபடிகளுக்கு, முன்பருவ விதைப்புக்கு ஏதுவாகவும், மண்ணில் மழை நீரை சேமிக்க ஏதுவாகவும், கோடை உழவு செய்யும் விவசாயிகளுக்கு, 50 சதவீதம் மானியமாக, ஏக்கருக்கு 800 ரூபாய், விவசாயிகளின் வங்கிக் கணக்கில், வரவு வைக்கப்படும்.
சிறு, குறு, ஆதிதிராவிட, பழங்குடி மற்றும் பெண் விவசாயிகளுக்கு, மானியம் வழங்குதலில் முன்னுரிமை அளிக்கப்படும். தொண்டாமுத்தூர் வட்டாரத்திற்கு, 350 ஏக்கர் ஒதுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு, அவர் கூறினார்.
கோடை உழவு மேற்கொண்டு, மானியம் பெற விரும்பும் மானாவாரி நில விவசாயிகள், உழவன் செயலி அல்லது, www.tnagrisnet.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம். மேலும் விபரங்களுக்கு, தொண்டாமுத்தூர் வட்டார வேளாண்மை துறை அலுவலகத்தை அணுகலாம்.