/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'ஆ ஊன்னா' கிளம்பிர்றாங்க மராத்தான் பாதுகாப்பு இல்லேன்னா ஆபத்துதான்!
/
'ஆ ஊன்னா' கிளம்பிர்றாங்க மராத்தான் பாதுகாப்பு இல்லேன்னா ஆபத்துதான்!
'ஆ ஊன்னா' கிளம்பிர்றாங்க மராத்தான் பாதுகாப்பு இல்லேன்னா ஆபத்துதான்!
'ஆ ஊன்னா' கிளம்பிர்றாங்க மராத்தான் பாதுகாப்பு இல்லேன்னா ஆபத்துதான்!
ADDED : செப் 30, 2024 04:26 AM
போத்தனூர்: கோவை மாநகரில் கனரக வாகனங்கள் அனுமதிக்கப்படும் நேரத்தில் நடத்தப்படும் மராத்தான் போட்டியில், பங்கேற்போரின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் சூழல் உள்ளது.
கோவை மாநகரில் பல்வேறு அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள், மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள் சார்பில் அடிக்கடி போதை ஒழிப்பு, புற்றுநோய் விழிப்புணர்வு என ஏதேனும் ஒரு கருத்தை குறிப்பிட்டு, மராத்தான் போட்டி நடத்தப்படுகிறது.
பெரும்பாலும் இவை அதிகாலை, 5:30 அல்லது 6:00 மணிக்கு துவக்கப்படுகிறது.
நூற்றுக்கணக்கானோர் பங்கேற்கும் இம்மராத்தான் நடக்கும் நேரத்தில்தான், கனரக வாகனங்கள் மாநகருக்குள் வந்து, செல்ல அனுமதிக்கப்படுகிறது. குறிப்பாக, செங்கல், மண், கல் லோடுடன் வரும் டிப்பர் லாரி டிரைவர்கள், கண்மூடித்தனமான வேகத்தில் வாகனத்தை ஓட்டுவதால், பங்கேற்பாளர்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது,
நேற்று, கோவை -- பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலையில் மராத்தான் போட்டி, குறிச்சி பொங்காளியம்மன் கோவில் அருகே துவங்கியது. 20 பெண்கள், 30 ஆயுதப்படை போலீசார் உள்பட, 130 பேர் பங்கேற்றனர்.
குறிச்சி ஒரு வழிப்பாதை மற்றும் முருகா நகர் பஸ் ஸ்டாப் அருகே, இருவர் லாரியில் சிக்கும் நிலை ஏற்பட்டது. போலீஸ்காரர் ஒருவர் இதனை கவனித்து, சப்தமிட்டதால் இருவரும் உயிர் தப்பினர்.
இத்தகைய சம்பவம் நிகழாமல் தவிர்க்க, போலீஸ் அதிகாரிகள் அடிக்கடி மராத்தான் நடத்த அனுமதி தரக்கூடாது.
அதனையும் மீறி அனுமதி கொடுத்தால் ஓட்டம் செல்லும் வழியில், போக்குவரத்தை அனுமதிக்கக் கூடாது. மாற்று பாதை விபரத்தை முன்னரே அறிவிக்க வேண்டும். இதனை மராத்தான் நடத்துவோரும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

