ADDED : ஆக 26, 2026 06:23 PM
கோவை: நகைச்சுவை சங்கத்தின், 32 வது நிகழ்ச்சி இந்துஸ்தான் கலை, அறிவியல் கல்லுாரியில் நடந்தது.
‘வாழ்க்கையெனும் வாட்ஸ் அப்’ என்ற தலைப்பில் ஈரோடு மகேஷ் பேசியதாவது:
வாட்ஸ் அப் பயன்படுத்துவதை யாராலும் தவிர்க்க முடியாது. தேவையில்லாத விஷயங்களை தவிர்த்து, தேவைப்படும் விஷயங்களை தெரிந்து கொள்ளவும் தெரிவிக்கவும் மட்டும் அதை பயன்படுத்த வேண்டும்.
வாழ்க்கையின் லட்சியமே மகிழ்ச்சிதான். பிறரையும் மகிழ்ச்வித்து நாமும் மகிழ்ச்சியாக வாழ வேண்டும். யாருடன் பழக வேண்டும் என்பதில் தெளிவு தேவை. தன் மூளையை இன்னும் யாரும் முழுமையாக பயன்படுத்தவில்லை. செயற்கை நுண்ணறிவு போன்ற எந்த தொழில்நுட்பத்தாலும் மனித மூளையை வீழ்த்த முடியாது. இவ்வாறு மகேஷ் பேசினார்.சொற்பொழிவாளர் சுகி.சிவம், சங்க செயலர் தனபால், வர்த்தக சபை துணை தலைவர் அண்ணாமலை பங்கேற்றனர்.
