/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'வேளாண் துறையில் ஏ.ஐ., கண்டுபிடிப்புகள் அவசியம்'
/
'வேளாண் துறையில் ஏ.ஐ., கண்டுபிடிப்புகள் அவசியம்'
ADDED : மார் 16, 2025 12:19 AM

கோவை: கலைஞர் கருணாநிதி தொழில்நுட்பக் கல்லுாரியில், தொழில்நுட்ப கல்வி குறித்த இரண்டு நாள் சர்வதேச கருத்தரங்கம் நடந்தது.
இதில், நான்கு வெளிநாடுகள் மற்றும் நாடு முழுவதிலிருந்தும் சமர்ப்பிக்கப்பட்ட, 823 ஆய்வுக் கட்டுரைகளில், மதிப்பாய்வு மூலம் 589 ஆய்வுக்கட்டுரைகள் விளக்கவுரைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டன.
தமிழ்நாடு வேளாண்மை பல்கலை டீன் வெங்கடேச பழனிச்சாமி பேசுகையில், ''வேளாண் துறையில் டிஜிட்டல் கருவிகளை ஒருங்கிணைத்து, செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான விவசாயம் மற்றும் உயிரி தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் அவசியமானது,'' என்றார். அமிர்தா பல்கலை பேராசிரியர் பகவதி சிவக்குமார், கல்லுாரியின் நிறுவனத் தலைவர் பொங்கலுார் பழனிச்சாமி, துணைத் தலைவர் இந்து, தலைமை நிர்வாக அதிகாரி மோகன்தாஸ் காந்தி, முதல்வர் ரமேஷ், துணை முதல்வர் மைதிலி, ஆராய்ச்சி துறைத்தலைவர் சாந்தி ஆகியோர் பங்கேற்றனர்.