/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'அ.தி.மு.க. தனி நபரை சார்ந்து அல்ல': ஈரோடு மேற்கு மாவட்ட செயலாளர் பேட்டி
/
'அ.தி.மு.க. தனி நபரை சார்ந்து அல்ல': ஈரோடு மேற்கு மாவட்ட செயலாளர் பேட்டி
'அ.தி.மு.க. தனி நபரை சார்ந்து அல்ல': ஈரோடு மேற்கு மாவட்ட செயலாளர் பேட்டி
'அ.தி.மு.க. தனி நபரை சார்ந்து அல்ல': ஈரோடு மேற்கு மாவட்ட செயலாளர் பேட்டி
UPDATED : செப் 09, 2025 07:53 AM
ADDED : செப் 09, 2025 06:45 AM
மேட்டுப்பாளையம்; 'அ.தி.மு.க., மாபெரும் இயக்கம். தனிநபரைச் சார்ந்து அல்ல' என, புதிதாக பொறுப்பேற்ற ஈரோடு மேற்கு மாவட்ட அ.தி.மு.க., செயலாளர் எம்.எல்.ஏ., செல்வராஜ் தெரிவித்தார்.
ஈரோடு மேற்கு மாவட்ட அ.தி.மு.க., செயலாளர் எம்.எல்.ஏ., செங்கோட்டையன் பிரிந்துள்ள அனைத்து அ.தி.மு.க.,வினரை ஒன்று சேர்க்க வேண்டும் என தெரிவித்து, பத்து நாட்கள் கெடு விதித்தார். இந்நிலையில் அ.தி.மு.க., பொது செயலாளர் பழனிசாமி, செங்கோட்டையன் வகித்து வந்த ஈரோடு மேற்கு மாவட்ட செயலாளர் பதவியை பறித்து, மேட்டுப்பாளையம் அ.தி.மு.க., எம்.எல்.ஏ., செல்வராஜுக்கு வழங்கி அறிவித்தார்.
இதைத் தொடர்ந்து கோபிசெட்டிபாளையம், பவானிசாகர், அந்தியூர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த அ.தி.மு.க., நகர, ஒன்றிய நிர்வாகிகள், கட்சி பொறுப்பாளர்கள் மேட்டுப்பாளையம் எம்.எல்.ஏ., செல்வராஜுவை, எம்.எல்.ஏ., தொகுதி அலுவலகத்தில் சந்தித்து, சால்வை அணிவித்து வாழ்த்தினர். இதில் முக்கிய நிர்வாகிகளாக பவானிசாகர் தொகுதி அ.தி.மு.க., எம்.எல்.ஏ., பண்ணாரி, முன்னாள் எம்.எல்.ஏ., க்கள் ரமணிதரன், சரஸ்வதி, முன்னாள் எம்.பி., காளியப்பன் உள்பட நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர். புதிதாக பொறுப்பேற்ற ஈரோடு மேற்கு மாவட்ட செயலாளர் எம்.எல்.ஏ., செல்வராஜ் கூறுகையில், அ.தி.மு.க., மாபெரும் இயக்கம். தனிநபரை சார்ந்து அல்ல. இயக்கம்தான் பெரிது. தனிநபர் அல்ல. பொதுச் செயலாளர் பழனிசாமி உத்தரவிற்கு இணங்க, வரும் தேர்தலில் அ.தி.மு.க., வெற்றி பெற ஒன்றிணைந்து இயங்குவோம், என்றார்.