/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தி.மு.க.,வை கண்டித்து அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்
/
தி.மு.க.,வை கண்டித்து அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்
ADDED : பிப் 14, 2026 05:20 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெ.நா.பாளையம்: மத்திய அரசின் வேலை உறுதி அளிப்பு திட்டத்தை சீர்குலைக்கும் நோக்கில் தி.மு.க., அரசு செயல்படுவதாக கூறி, அ.தி.மு.க., சார்பில், பெரியநாயக்கன்பாளையம் பஸ் ஸ்டாண்டில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
நிகழ்ச்சிக்கு, கவுண்டம்பாளையம் எம்.எல்.ஏ., அருண்குமார் தலைமை வகித்தார். இதில், மாநில பா.ஜ., செயலாளர் நந்தகுமார், அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர்கள் ஜெயராமன், துரைசாமி, நகரச் செயலாளர் அ.ம.மு.க., த.மா.கா., கட்சிகளின் நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

