ADDED : ஜூலை 06, 2026 06:12 AM
கோவை: கிணத்துக்கடவு சட்டசபை தொகுதி அ.தி.மு.க., செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது.
அதில் அ.தி.மு.க. புறநகர் மத்திய மாவட்ட செயலாளரும், கழக அமைப்பு செயலாளருமான வேலுசாமி பேசியதாவது:
சட்டசபை தேர்தலில் வாக்களித்த மக்களின் நம்பிக்கைக்கு விரோதமாக, சுயநலத்துக்காக த.வெ.க.வுக்கு சிலர் செல்வது ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்குவதாகும். கட்சியை விட்டு வெளியேற ஏதாவது ஒரு காரணத்தை சொல்ல வேண்டும்.
அதற்காக தி.மு.க.வுடன் கூட்டணி முயற்சி செய்ததாக சொல்கின்றனர். அதில் உண்மை இல்லை. தலைமை சரியில்லை என்று நான்காண்டு காலம் ஒட்டி உறவாடிவிட்டு வெளியேறுகின்றனர்.
அந்த நான்காண்டு காலம் தலைமை சரியாக இருந்ததா. எல்லாவற்றையும் சந்தித்த இயக்கம் தான் அ.தி.மு.க., ஜெ., சொன்னதை போல் பீனிக்ஸ் பறவையை போல மீண்டும் அ.தி.மு.க. உயிர்த்தெழும்.
அ.தி.மு.க., எழுச்சி பெற வேண்டும். அதற்கு நம் இளைஞர், இளம்பெண் பாசறை, மகளிர், எம்.ஜி.ஆர்., இளைஞர் அணி, தொழில்நுட்ப பிரிவினர் கட்சி பணிகளை தீவிரப்படுத்த வேண்டும்.
இவ்வாறு, அவர் பேசினார். முன்னாள் அமைச்சர் தாமோதரன், முன் னாள் எம்.எல்.ஏ.,கஸ்துாரி வாசு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
