/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஒடிசாவில் அகில இந்திய யோகா போட்டி; அசத்தும் 10 பேர் அடங்கிய பல்கலை அணி
/
ஒடிசாவில் அகில இந்திய யோகா போட்டி; அசத்தும் 10 பேர் அடங்கிய பல்கலை அணி
ஒடிசாவில் அகில இந்திய யோகா போட்டி; அசத்தும் 10 பேர் அடங்கிய பல்கலை அணி
ஒடிசாவில் அகில இந்திய யோகா போட்டி; அசத்தும் 10 பேர் அடங்கிய பல்கலை அணி
ADDED : டிச 25, 2024 08:24 PM
கோவை; அகில இந்திய அளவிலான யோகா போட்டியில் இரு ஆண்கள், எட்டு பெண்கள் உட்பட, 10 பேர் பாரதியார் பல்கலை சார்பில் பங்கேற்றுள்ளனர்.
ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் உள்ள கலிங்கா சமூக அறிவியல் கல்வி நிறுவனத்தில் நேற்று முதல் வரும், 28ம் தேதி வரை, அகில இந்திய அளவிலான யோகா போட்டிகள் நடந்துவருகின்றன. இதற்கென, நேரு கலை அறிவியல் கல்லுாரியில், பாரதியார் பல்கலை அணிக்கான தேர்வு நடந்தது.
இதில், பல்கலைக்கு உட்பட்ட கல்லுாரிகளை சேர்ந்த, 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்று, தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.
நிறைவில் ஆண்கள் பிரிவில், நேரு கலை அறிவியல் கல்லுாரி மாணவர் சுமேஸ், பி.எஸ்.ஜி., கலை அறிவியல் கல்லுாரி மாணவர் ஸ்ரீ பாலாஜி ஆகியோர், தேர்வு செய்யப்பட்டனர்.
அதேபோல், பெண்கள் பிரிவில், இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லுாரி மாணவி கீத்திகா, பி.எஸ்.ஜி., கல்லுாரி மாணவி இளந்தென்றல், கோவை அரசு கலைக் கல்லுாரி மாணவி அஸ்வின் நிஷா,நேரு கல்லுாரி மாணவியர் ஐஸ்வர்யா, ஸ்ரீ சாருலதா, ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லுாரி மாணவி அனுகீதா ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.
குமரகுரு லிபரல் கலை அறிவியல் கல்லுாரி மாணவி வைஷ்ணவி, கிருஷ்ணா கலை அறிவியல் கல்லுாரி மாணவி லத்திகா ஸ்ரீ என, 10 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்கள் புவனேஸ்வரில் நடக்கும், பல்கலைகளுக்கு இடையேயான யோகா போட்டியில் அசத்தி வருகின்றனர்.