/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பணிகளில் குளறுபடி குற்றச்சாட்டு: பி.எல்.ஓ.,க்கள் பணி புறக்கணிப்பு
/
பணிகளில் குளறுபடி குற்றச்சாட்டு: பி.எல்.ஓ.,க்கள் பணி புறக்கணிப்பு
பணிகளில் குளறுபடி குற்றச்சாட்டு: பி.எல்.ஓ.,க்கள் பணி புறக்கணிப்பு
பணிகளில் குளறுபடி குற்றச்சாட்டு: பி.எல்.ஓ.,க்கள் பணி புறக்கணிப்பு
UPDATED : டிச 13, 2025 08:06 AM
ADDED : டிச 13, 2025 05:09 AM

போத்தனூர்: சிறப்பு தீவிர திருத்த வாக்காளர் பட்டியல் பணி தொடர்பாக, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பதிவேற்றும் பணி, தாலுகாவாரியாக மேற்கொள்ளப்படுகிறது.
இப்பதிவேற்ற பணி, கல்லூரி மாணவர்களால் மேற்கொள்ளப்பட்டதில், குளறுபடிகள் நடந்துள்ளதாக, புகார் எழுந்துள்ளது. கடந்த வார இறுதியில் பதிவேற்ற பணியை மேற்கொள்ள, பி.எல்.ஓ.,க்கள் தாலுகா அலுவலகத்திற்கு வரவழைக்கப்பட்டனர். இரவு வரை நீடித்த பணியால், பி.எல்.ஓ.,க்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகினர்.
நேற்று மீண்டும் புதியதாக பதிவேற்றம் செய்ய, பி.எல்.ஓ.,க்கள் அறிவுறுத்தப்பட்டனர். மாலை, 4:00 மணிக்கு மேல் இப்பணி சுமையால், அதிருப்தியடைந்த பி.எல்.ஓ.,க்கள் பணியை புறக்கணித்து, உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மதுக்கரை தாலுகா அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். மதுக்கரை போலீசார் சமாதானப்படுத்தினர்.
பதிவேற்ற பணிக்கு ஒவ்வொரு பி.எல்.ஓ.,வுக்கும், உதவியாளர் ஒருவரை நியமிப்பதாக, வருவாய் துறை உயரதிகாரிகள் உறுதியளித்ததால், போராட்டம் முடிவுக்கு வந்தது. சுந்தராபுரம் மற்றும் பேரூர் தாலுகாவிற்குட்பட்ட பகுதிகளிலும், இப்போராட்டம் நடந்தது.

