/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சாம்பியன் பட்டம் வென்றது அல்லிகுளம் கிரிக்கெட் அணி
/
சாம்பியன் பட்டம் வென்றது அல்லிகுளம் கிரிக்கெட் அணி
சாம்பியன் பட்டம் வென்றது அல்லிகுளம் கிரிக்கெட் அணி
சாம்பியன் பட்டம் வென்றது அல்லிகுளம் கிரிக்கெட் அணி
ADDED : அக் 21, 2024 04:25 AM
அன்னுார்: அன்னுாரில், பிளே லுாப் டர்ப் மைதானத்தில், எய்ம் பவுண்டேஷன் மற்றும் எப்.சி.சி., கிரிக்கெட் அகாடமி சார்பில், மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி இரு வாரங்களுக்கு முன் துவங்கியது. பகல் மற்றும் இரவு ஆட்டங்கள் நடைபெற்றன.
அன்னுார், புளியம்பட்டி, சிறுமுகை, மேட்டுப்பாளையம், அவிநாசி, கருமத்தம்பட்டி, கோவையைச் சேர்ந்த 48 அணிகள் பங்கேற்றன.
இறுதிப்போட்டி நேற்று முன்தினம் நடந்தது. பரிசளிப்பு விழாவுக்கு, எய்ம் பவுண்டேஷன் ஒருங்கிணைப்பாளர் சந்திரதாஸ் தலைமை வகித்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வன் வெற்றிபெற்றஅல்லிகுளம் அணிக்கு ரொக்க பரிசு, கோப்பை மற்றும் பதக்கங்களை வழங்கினார்.
இரண்டாம் இடம் பெற்ற சிறுமுகை ஸ்பாட் டிரீம் லெவன் அணிக்கு, எஸ்.ஐ., சிவானந்தம் பதக்கங்களை வழங்கினார். அன்னுார் ஜாலி பாய்ஸ் அணி மூன்றாம் இடமும், அன்னுார் அன்பீட்டபிள் அணி நான்காம் இடமும் பிடித்தன.
மேட்டுப்பாளையம் ஸ்மேசர்ஸ் அணி சிறந்த அணியாகவும், அந்த அணியின் கேப்டன் சாம், சிறந்த கேப்டனாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். சிறுமுகை ராஜ் சிறந்த பேட்ஸ்மேனாகவும், அல்லிகுளம் பத்ரி சிறந்த பவுலராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

