/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அரசூர் கே.பி.ஆர். கல்லுாரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
/
அரசூர் கே.பி.ஆர். கல்லுாரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
அரசூர் கே.பி.ஆர். கல்லுாரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
அரசூர் கே.பி.ஆர். கல்லுாரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
ADDED : செப் 29, 2025 12:36 AM

கோவை; அரசூர் கே.பி.ஆர்., பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரியில், முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நடந்தது. கல்லுாரி துவங்கியது முதல், கடந்த ஆண்டு வரை படித்து முடித்த ஆயிரத்துக்கு மேற்பட்ட மாணவர்கள் குடும்பத்தினருடன் பங்கேற்றனர்.
கே.பி.ஆர்.,முன்னாள் மாணவர்கள் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குவது பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளதென, கே.பி.ஆர்., குழுமத்தின் தலைவர் ராமசாமி கூறினார்.
தொடர்ந்து, முன்னாள் மாணவர்களின் இசை நிகழ்ச்சி, நடனம் மற்றும் மிமிக்ரி போன்ற கலைநிகழ்ச்சிகள் நடந்தன. 10 ஆண்டுகள் நிறைவுபெற்ற முன்னாள் மாணவர்கள் கவுரவிக்கப்பட்டனர். முன்னாள் மாணவர் சங்கத்தின் புதிய உறுப்பினர்கள் அறிவிக்கப்பட்டு, வரும் ஆண்டுகளில் சங்கத்தின் பல்வேறு செயல்பாடுகள் குறித்து விவரிக்கப்பட்டது. கல்லுாரி செயலர் காயத்ரி, முதல்வர் சரவணன், துணை முதல்வர் மற்றும் பேராசிரியர்கள் கலந்துகொண்டனர்.