எஸ்.என்.எஸ். கல்லுாரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
எஸ்.என்.எஸ். கல்லுாரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
UPDATED : நவ 11, 2026 01:32 PM
ADDED : நவ 11, 2026 01:30 PM

கோவை: எஸ்.என்.எஸ் தொழில்நுட்பக் கல்லுாரியில், ‘நட்பே இணைந்திடு’ என்ற பெயரில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நடந்தது. 245 முன்னாள் மாணவர்கள் பங்கேற்றனர்.
சென்னையைச் சேர்ந்த ஹியூரிஸ்டிக் லேப்ஸ் நிறுவனத்தின் தலைமை செயற்கை நுண்ணறிவு அதிகாரி டாக்டர் கார்த்திகேயன் சுவாமிநாதன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். ஸ்வீடனில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் பணியாற்றும் அருண் பிரகாஷ் ஜோதிமணி, டெலாய்ட் கன்சல்டிங் நிறுவன மேலாளர் இளமதி குப்புசாமி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றனர்.
முன்னாள் மாணவர்கள் தங்களது தொழில் வளர்ச்சி, சாதனைகள், கல்லூரி நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். கலைநிகழ்ச்சிகள், பொழுதுபோக்கு விளையாட்டுகள், வளாகச் சுற்றுப்பயணம், துறைவாரியான சந்திப்பு, பேராசிரியர்களுடனான கலந்துரையாடல், மாணவர்களுடனான சந்திப்பு நடந்தது.
எஸ்.என்.எஸ். குழுமத்தின் நிறுவன தலைவர் சுப்பிரமணியன், தாளாளர் ராஜலட்சுமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
