/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாநகராட்சி பள்ளியில் முன்னாள் மாணவர் சந்திப்பு
/
மாநகராட்சி பள்ளியில் முன்னாள் மாணவர் சந்திப்பு
ADDED : நவ 16, 2025 12:57 AM

கோவை: வெங்கிட்டாபுரம் மாநகராட்சி பா.கமலநாதன் நினைவு மேல்நிலைப்பள்ளியில், முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
பள்ளியில் 1995ம் ஆண்டு பத்தாம் வகுப்பு பயின்ற 30க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் நிகழ்வில் கலந்து கொண்டனர். அதே ஆண்டு வரை 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை பாடம் நடத்திய ஆசிரியைகளான சித்ரகலா, சோபனாகுமாரி மற்றும் வாசுகி ஆகியோர் சிறப்பு விருந் தினர்களாக பங்கேற்றனர்.
கல்வி கற்றுத் தந்து, வாழ்வுக்கு வழிகாட்டிய ஆசிரியர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், முன்னாள் மாணவர்கள் அனைவரும், தங்கள் ஆசிரியர்களுக்கு பாதபூஜை செய்து ஆசி பெற்றனர். அவர்களுக்கு நினைவுப் பரிசுகளை வழங்கி, சால்வை அணிவித்து கவுரவித்தனர்.
தங்கள் பள்ளி நாட்களை நினைவுகூர்ந்து, முன்னாள் மாணவர்கள் ஒருவருக்கொருவர் மகிழ்வை பகிர்ந்து கொண்டனர். சமூகப் பங்களிப்பாக, தற்போது பள்ளியில் பயிலும் அனைத்து மாணவ-மாணவிகளுக்கும், பணிபுரியும் ஆசிரியர்களுக்கும், பணியாளர்களுக்கும் மதிய உணவு வழங்கினர்.

