ADDED : செப் 07, 2026 09:17 PM
அ நிறம் | அளவு
உடுமலை: உடுமலை–மூணாறு ரோட்டில் பள்ளபாளையத்தில் ஸ்ரீ ஆதர்ஷ் மெட்ரிக்., மேல்நிலைப்பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.
பள்ளி துவங்கிய ஆண்டில் இருந்து கடந்தாண்டு வரை படித்த, சுமார் 100க்கும் அதிகமான, மாணவ, மாணவியர் இந்த சந்திப்பில் பங்கேற்றனர்.
பள்ளியின் தாளாளர், செயலர் மற்றும் முதல்வர், ஆசிரியர்கள் பங்கேற்றனர். முன்னாள் மாணவர்கள் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டு, குழு புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
பள்ளி நிர்வாகம் சார்பில் அனைவருக்கும் மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆண்டுதோறும் இத்தகைய கூட்டங்களை நடத்த தீர்மானிக்கப்பட்டது.
