/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'அலுமினி டிராபி' கிரிக்கெட்; இந்துஸ்தான் கல்லுாரி வெற்றி
/
'அலுமினி டிராபி' கிரிக்கெட்; இந்துஸ்தான் கல்லுாரி வெற்றி
'அலுமினி டிராபி' கிரிக்கெட்; இந்துஸ்தான் கல்லுாரி வெற்றி
'அலுமினி டிராபி' கிரிக்கெட்; இந்துஸ்தான் கல்லுாரி வெற்றி
ADDED : ஜூலை 24, 2025 09:22 PM
கோவை; இந்துஸ்தான் இன்ஜி., மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரியில் மூன்றாவது 'அலுமினி டிராபி' கிரிக்கெட் போட்டி நேற்று துவங்கியது; வரும், 28ம் தேதி நிறைவடைகிறது. இதில், 16 அணிகள் இரு குழுக்களாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடக்கின்றன.
'நாக் அவுட்' முறையிலான இக்கிரிக்கெட் போட்டியை, இந்துஸ்தான் கல்வி நிறுவனங்களின் நிர்வாக அறங்காவலர் சரஸ்வதி கண்ணய்யன், கல்லுாரி முதல்வர் ஜெயா, உடற்கல்வி இயக்குனர் ரவிக்குமார் ஆகியோர் துவக்கிவைத்தனர்.
தொடர்ந்து, நடந்த முதல் போட்டியில் இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லுாரி அணி ஏழு விக்கெட்கள் வித்தியாசத்தில், இந்துஸ்தான் இன்ஜி., மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரி அலுவலர் அணியை வென்றது.
இரண்டாம் போட்டியில், இந்துஸ்தான் இன்ஜி., மற்றும் தொழில்நுட்ப அணி, கற்பகம் இன்ஜி., மற்றும் தொழில்நுட்ப அணியை, 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிகொண்டது. தொடர்ந்து போட்டிகள் நடக்கின்றன.