தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ நித்தமும் வேண்டும் சுத்தம்!

நித்தமும் வேண்டும் சுத்தம்!

நித்தமும் வேண்டும் சுத்தம்!


ADDED : செப் 24, 2026 05:41 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 24, 2026 05:41 PM


Follow on Google
அ நிறம் | அளவு

l பள்ளிகளில் கடைபிடிக்க வேண்டியவை... l தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரை

பெ.நா.பாளையம்: டெங்கு பரவாமல் தடுக்க, பள்ளி வளாகங்களில் பொது சுகாதாரம், துாய்மை பணிகள், கொசு உற்பத்தி தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள, அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

l வாரந்தோறும் புதன்கிழமை, பள்ளி வளாகங்களில் நீர் தேங்காதவாறு உறுதி செய்து, அனைத்து கழிவுகளையும் அகற்றி, வளாகங்களை துாய்மையாக்கும் பணியில் ஈடுபட வேண்டும்.

l பழைய கட்டடங்கள், பயன்பாட்டில் இல்லாத அறைகள் அல்லது பகுதிகளில் கழிவுகள் குவிந்து கிடந்தால், அவற்றை பாதுகாப்பாக அகற்ற உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து செயல்பட வேண்டும். பள்ளிகளில், துாய்மை பணிகள் முறையாக நடக்கின்றவா என்பதை தொடர் கள ஆய்வுகள் வாயிலாக கண்காணிக்க வேண்டும்.

l நீர் தேங்கியுள்ள அல்லது கொசு உற்பத்திக்கான வாய்ப்பு அதிகம் உள்ள இடங்களை கண்காணித்து, உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

l ஒவ்வொரு பள்ளியிலும் கழிவு இல்லை, நீர்த்தேக்கம் இல்லை, கொசு உற்பத்தி இல்லை என்ற நிலையை ஏற்படுத்த வேண்டும். வளாகத்தில் காணப்படும் குறைகளை, உடனுக்குடன் சரி செய்ய வேண்டும். குறிப்பாக, மொட்டைமாடி, மழைநீர் வடிகால், குடிநீர் தொட்டிகள், கழிப்பறைகள் மற்றும் அவற்றை சுற்றியுள்ள பகுதிகள், பள்ளி சமையலறை, விளையாட்டு மைதானம், கட்டடங்களின் பின்புற பகுதிகள், சுற்றுச்சுவர் ஓரங்கள், மரங்கள் மற்றும் புதர்கள் அடர்ந்த பகுதி, பயன்படுத்தப்படாத பொருட்கள் வைக்கப்பட்டுள்ள இடங்கள், பழைய டயர்கள், பிளாஸ்டிக் மற்றும் உலோக கொள்கலன்கள் வைக்கப்பட்டுள்ள இடங்கள் ஆகியவற்றை தொடர்ந்து ஆய்வு செய்ய வேண்டும்.

l குடிநீர் தொட்டிகள் மற்றும் பிற நீர் தொட்டிகள் மூடப்பட்டு இருப்பதை உறுதி செய்ய வேண்டும். மழை நீர் வடிகால்களில் அடைப்பு இருந்தால், அவற்றை சரி செய்ய வேண்டும். புதர்கள் அதிகமாக உள்ள இடங்களை சுத்தம் செய்ய வேண்டும். கழிப்பறைகள் மற்றும் கை கழுவும் பகுதிகளை சுத்தமாக வைக்க வேண்டும். பள்ளி சமையலறை மற்றும் அதன் சுற்றுப்புறங்களை, சுகாதாரமாக பராமரிக்க வேண்டும்.

l மழை காரணமாக, பள்ளியின் வகுப்பறைகள் மற்றும் கழிப்பறைகள் ஏதேனும் பாதிக்கப்பட்டிருப்பின், அத்தகைய வகுப்பறைகள் மற்றும் கழிப்பறைகளை பயன்படுத்தாமல், பூட்டி வைக்க வேண்டும்.

l மாணவர்கள், சாலையில் மழை நீர் கால்வாய்கள், பாதாள சாக்கடை குழிகள் இருக்கும் இடங்களில் கவனமாக செல்ல அறிவுரை வழங்க வேண்டும். இது தொடர்பாக மாணவர்கள் மற்றும் பெற்றோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

l டெங்கு, சிக்–குன்–குனியா உட்பட காய்ச்சல்களில் இருந்து பாதுகாத்து கொள்ள தேவையான அறிவுரையை, மாணவர்களுக்கு அடிக்கடி வழங்க வேண்டும்.

l பள்ளி வளாகத்தை துாய்மையாக வைத்திருப்பதில், மாணவர்களுக்கும் பொறுப்பு உண்டு என்பதை அவர்களுக்கு உணர்த்த வேண்டும்.

இதை ஒவ்வொரு பள்ளியில் உள்ள தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் அந்தந்த பகுதி வட்டார கல்வி அலுவலர்கள் தொடர்ந்து பின்பற்ற வேண்டும் என, பள்ளி கல்வித்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us