/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பிரசார கூட்டத்தில் ஆம்புலன்ஸ் விடுறாங்க! எம்.எல்.ஏ. ஜெயராமன் குற்றச்சாட்டு
/
பிரசார கூட்டத்தில் ஆம்புலன்ஸ் விடுறாங்க! எம்.எல்.ஏ. ஜெயராமன் குற்றச்சாட்டு
பிரசார கூட்டத்தில் ஆம்புலன்ஸ் விடுறாங்க! எம்.எல்.ஏ. ஜெயராமன் குற்றச்சாட்டு
பிரசார கூட்டத்தில் ஆம்புலன்ஸ் விடுறாங்க! எம்.எல்.ஏ. ஜெயராமன் குற்றச்சாட்டு
ADDED : ஆக 26, 2025 10:17 PM

பொள்ளாச்சி; ''அ.தி.மு.க. பொதுச் செயலாளர் பிரசாரத்தின் போது, தி.மு.க.,வினர் துாண்டுதலின் பேரில், அரசியல் ஆதாயத்துக்காக மட்டுமே ஆம்புலன்ஸ் அனுப்பப்படுகின்றன,'' என, எம்.எல்.ஏ. பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்தார்.
கோவை புறநகர் தெற்கு மாவட்ட ஜெ. பேரவை சார்பில், திண்ணை பிரசாரம், வடசித்துாரில் நேற்று நடந்தது. ஜெ. பேரவை மாவட்ட செயலாளர் விஜயகுமார் தலைமை வகித்தார்.
எம்.எல்.ஏ. பொள்ளாச்சி ஜெயராமன், அ.தி.மு.க.வின், 10 ஆண்டு கால ஆட்சியில் தமிழகத்தில் நிறைவேற்றப்பட்ட சாதனை திட்டங்கள், தி.மு.க. அரசின், நான்கரை ஆண்டுகளாக பொதுமக்கள், விவசாயிகள், வியாபாரிகள் மற்றும் அனைத்து தரப்பு மக்களுக்கும் ஏற்பட்ட இன்னல்கள் குறித்து விளக்கி துண்டு பிரசுரங்களை வழங்கினார்.
அதன்பின், நிருபர்களிடம் எம்.எல்.ஏ. கூறியதாவது: திருப்பூரை சேர்ந்த ராதாகிருஷ்ணன், துணை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டது கொங்கு மண்டலத்துக்கு பெருமை சேர்க்கிறது. தமிழகத்தை சேர்ந்த மறைந்த விஞ்ஞானி அப்துல்கலாம், இரண்டாவது முறையாக ஜனாதிபதி வேட்பாளராக அறிவித்தற்கு தி.மு.க. எதிர்ப்பு தெரிவித்தது.
தி.மு.க.வினர், தமிழர்களுக்கு அதை செய்ய வேண்டும்; இதை செய்ய வேண்டும் என நன்றாக சித்தாந்தம் பேசுவர். ஆனால், தமிழர்களுக்கு வாய்ப்பு வரும் போது, அவர்களுக்கு வாய்ப்பு அளிக்காமல் காலை வாரிவிடுவது தி.மு.க.வின் வழக்கம்.
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பழனிசாமி செல்லும் இடங்கள் எல்லாம் மக்கள் கூட்டம், கூட்டமாக திரள்கின்றனர். இதை பொறுத்துக்கொள்ள முடியாமல் தி.மு.க.வினர், திட்டமிட்டே ஆம்புலன்ஸ் அனுப்பி அரசியல் ஆதாயம் தேடுகின்றனர். ஆம்புலன்ஸ்கள், நோயாளிகளை மீட்க போவது இல்லை. இது வெறும் கலாட்டா செய்வதற்காக அனுப்பப்படுகின்றன. இவ்வாறு, எம்.எல்.ஏ. கூறினார்.
ஒன்றிய செயலாளர்கள் முத்துக்கருப்பண்ணசாமி, திருஞானசம்பந்தம், செந்தில்குமார் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.