sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

அம்மா திருமண மண்டப கட்டடம் நகராட்சி வசம் ஒப்படைக்க திட்டம்! கலெக்டர் உத்தரவுப்படி அதிகாரிகள் நடவடிக்கை

/

அம்மா திருமண மண்டப கட்டடம் நகராட்சி வசம் ஒப்படைக்க திட்டம்! கலெக்டர் உத்தரவுப்படி அதிகாரிகள் நடவடிக்கை

அம்மா திருமண மண்டப கட்டடம் நகராட்சி வசம் ஒப்படைக்க திட்டம்! கலெக்டர் உத்தரவுப்படி அதிகாரிகள் நடவடிக்கை

அம்மா திருமண மண்டப கட்டடம் நகராட்சி வசம் ஒப்படைக்க திட்டம்! கலெக்டர் உத்தரவுப்படி அதிகாரிகள் நடவடிக்கை

1


ADDED : நவ 27, 2024 09:41 PM

Google News

ADDED : நவ 27, 2024 09:41 PM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அம்மா திருமண மண்டபத்தை, நகராட்சி நிர்வாகத் திடம் ஒப்படைப்பதாக வடக்கு ஒன்றிய அதிகாரிகள் தெரிவித்தனர். ஐந்து ஆண்டுகளுக்குப்பிறகு நகராட்சி வசம் வர உள்ளதால் முறையாக பராமரித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு விட நகராட்சி திட்டமிட்டுள்ளது.

பொள்ளாச்சி அருகே ஆச்சிப்பட்டியில், அம்மா திருமண மண்டபம் கடந்த, 2019ம் ஆண்டு, 1.50 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டது.

ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பயன்பெறும் வகையில், அப்போதைய எம்.பி., மகேந்திரன் தொகுதி மேம்பாட்டு நிதியில் இந்த மண்டபம் கட்டப்பட்டது.

பயன்பாட்டுக்கு வராமல் இருந்த மண்டபம், பொள்ளாச்சி தெற்கு ஒன்றிய அலுவலக கட்டடமாக செயல்பட்டது. இதனால், மண்டபம் பயன்பாட்டில் இருந்ததால் பராமரிப்புடன் காணப்பட்டது.

இந்நிலையில், சில மாதங்களுக்கு முன் கட்டுமானப்பணிகள் முடிந்ததால், புதிய கட்டடத்துக்கு பொள்ளாச்சி தெற்கு ஒன்றிய அலுவலகம் மாற்றப்பட்டது. அதன்பின், கட்டடம் போதிய பராமரிப்பின்றி, புதர்கள் மண்டி காணப்படுகிறது. விஷ பூச்சிகளின் இருப்பிடமாக மாறியுள்ளது.

பொள்ளாச்சி அம்மா திருமண மண்டபம் முன், குப்பைகள் குவியலாக போட்டு எரிக்கப்பட்டு, சுகாதாரமின்றி அந்த இடம்காட்சியளிக்கிறது.

நகரின் எல்லைப்பகுதியில் உள்ள, மண்டபத்தின் முன்பகுதியில் குவிந்து கிடக்கும் குப்பைகளால் தொற்று நோய் பரவும் அபாயமும் உள்ளது.

பராமரிப்பில் இழுபறி


ஆச்சிப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில், 10 ஏக்கர் நிலம் நகராட்சிக்கு சொந்தமானது உள்ளது. இங்கு, அம்மா திருமண மண்டபம், ஒருங்கிணைந்த நீதிமன்றம், புதிய பஸ் ஸ்டாண்ட்டுக்காக இடம் ஒதுக்கப்பட்டது.

நகராட்சி இடத்தில் கட்டப்பட்ட அம்மா திருமண மண்டபத்துக்கு, வடக்கு ஒன்றியம் வாயிலாக சுற்றுச்சுவர் கட்டப்பட்டது. அதன்பின்னர், பராமரிப்பது, நகராட்சியா அல்லது ஒன்றியமா என்ற குழப்பம் நீடித்தது.

ஒன்றிய நிர்வாகம், சுற்றுச்சுவர் கட்டியதற்கான தொகையை செலுத்த நகராட்சி நிர்வாகத்திடம் வலியுறுத்தியது. இதற்கு, நகராட்சி நிர்வாகம், பணம் தர மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால், மண்டபத்தை ஒப்படைப்பதில் இழுபறி நீடித்தது.

ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பயன்பெறும் வகையில் கட்டப்பட்ட, அம்மா திருமண மண்டப பணிகள் முடிந்தும், இதுவரை ஒரு திருமணம் கூட நடத்தப்படவில்லை.

எந்த நோக்கத்துக்காக மண்டபம் கட்டப்பட்டதோ அதன் நோக்கமே வீணாகுவதாக சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்தனர். இது குறித்து சப் - கலெக்டரிடம் மா.கம்யூ., கட்சியினர் மனு கொடுத்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர்.

இது குறித்து நகராட்சி கமிஷனர் கணேசன், மாவட்ட கலெக்டரிடம், மண்டபத்தை நகராட்சியிடம் ஒப்படைக்க வேண்டும் என, வலியுறுத்தினார்.

இந்நிலையில், நேற்றுமுன்தினம் நடந்த வடக்கு ஒன்றியக்குழு கூட்டத்தில், நகராட்சியிடம் ஒப்படைப்பது குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

வடக்கு ஒன்றிய அதிகாரிகள் கூறுகையில், 'அம்மா திருமண மண்டபம் ஒப்படைப்பது குறித்து வடக்கு ஒன்றியக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும், மாவட்ட கலெக்டர் உத்தரவின்படி, மண்டபத்தை நகராட்சியிடம் ஒப்படைக்கிறோம்,' என்றனர்.

பயன்பாட்டுக்கு வரணும்


சமூக ஆர்வலர்கள் கூறுகையில், 'நகராட்சி இடத்தில் கட்டப்பட்ட அம்மா திருமண மண்டபம், தற்போது முறைப்படி நகராட்சியிடம் ஒப்படைக்க ஒன்றிய அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

ஐந்து ஆண்டுகாலமாக இழுபறியில் இருந்த நிலையில் கமிஷனர் முயற்சியால் மீண்டும் நகராட்சியிடம் அம்மா திருமண மண்டபம் ஒப்படைப்பு செய்யப்படுகிறது.

எனவே, பஸ் ஸ்டாண்டையொட்டி அமைந்துள்ள மண்டபத்தை சுத்தம் செய்து, பராமரித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கனும்,' என்றனர்.






      Dinamalar
      Follow us