/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சாலையில் அறுந்து விழுந்தது மின் ஒயர்!
/
சாலையில் அறுந்து விழுந்தது மின் ஒயர்!
ADDED : அக் 28, 2025 12:43 AM

கோவை: கோவை, காட்டூரிலுள்ள சோமசுந்தரா சாலையில் ஒரு பகுதியில் குடியிருப்புகளும், மற்றொரு பகுதியில் வணிக வர்த்தக நிறுவனங்களும் உள்ளன. இப்பகுதியில் உள்ள குடியிருப்பு மற்றும் வர்த்தக நிறுவனங்களுக்கான மின் இணைப்புகள், சாலையின் மேற்பகுதியில் மின்கம்பத்தின் வழியாக செல்கிறது.
நேற்று பெய்த மழைக்கு, சோமசுந்தரா சாலையில் உள்ள மின் கம்பங்களில் இணைப்பு செய்த மின் ஒயர்கள் அறுந்து, சாலையில் குறுக்கே இறங்கின. வாகன ஓட்டிகளுக்கு தடையை ஏற்படுத்தின. வாகன ஓட்டிகள் ஆபத்தை உணராமல், அவற்றை கடந்து சென்றனர்.
மின்வாரிய அதிகாரிகள் கூறுகையில், 'வீடுகளுக்கும், வர்த்தக நிறுவனங்களுக்கும் செல்லும் மின் ஒயர் இது. ரப்பர் குழாய் போன்ற பாதுகாப்பு அம்சம் நிறைந்தது. உடனுக்குடன் சரிசெய்யப்பட்டு வழக்கம் போல் வாகனங்கள் சென்று வருகின்றன' என்றனர்.

