/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
திறந்தவெளி 'பார்' ஆன பயணியர் நிழற்கூரை
/
திறந்தவெளி 'பார்' ஆன பயணியர் நிழற்கூரை
ADDED : ஜன 02, 2024 11:33 PM

வால்பாறை;வால்பாறையில், பயணியர் நிழற்கூரை திறந்தவெளி பாராக மாறியதால், மக்கள் கவலையடைந்துள்ளனர்.
வால்பாறை நகராட்சி சார்பில், மக்கள் பயன்பாட்டிற்காக நுாற்றுக்கும் மேற்பட்ட பயணியர் நிழற்கூரைகள் கட்டப்பட்டுள்ளன. வால்பாறை நகரை தவிர, எஸ்டேட் பகுதிகளில் கட்டப்பட்டுள்ள பெரும்பாலான பயணியர் நிழற்கூரை, மாலை நேரத்தில் திறந்தவெளி 'பார்' போன்று மாறி விடுகிறது. மது பிரியர்கள் நிழற்கூரையில் அமர்ந்து மது அருந்துகின்றனர்.
தொழிலாளர்கள் கூறியதாவது:
மக்கள் பயன்பாட்டிற்காக பல கோடி ரூபாய் மதிப்பீட்டில், பல்வேறு இடங்களில் கட்டப்பட்டுள்ள பயணியர் நிழற்கூரை திறந்தவெளி 'பார்' ஆக மாறிவருகிறது. 'குடி'மகன்கள் குடித்து விட்டு, பாட்டில், டம்ளர், உணவு பொட்டலங்களை அங்கேயே வீசி செல்கின்றனர்.
இதனால், நிழற்கூரையை மக்கள் பயன்படுத்த முடியாத நிலையில், பஸ்சிற்காக கால்கடுக்க காத்துக்கிடக்க வேண்டிய பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது. பயணியர் நிழற்கூரையை திறந்தவெளி பாராக மாற்றி சமூக விரோத செயல்களில் ஈடுபடுபவர்களை தடுக்க, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.