/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அவல நிலையில் அங்கன்வாடி மைய கட்டடம்; குழந்தைகளை அனுப்ப பெற்றோர் அச்சம்
/
அவல நிலையில் அங்கன்வாடி மைய கட்டடம்; குழந்தைகளை அனுப்ப பெற்றோர் அச்சம்
அவல நிலையில் அங்கன்வாடி மைய கட்டடம்; குழந்தைகளை அனுப்ப பெற்றோர் அச்சம்
அவல நிலையில் அங்கன்வாடி மைய கட்டடம்; குழந்தைகளை அனுப்ப பெற்றோர் அச்சம்
ADDED : ஜூன் 13, 2025 09:59 PM

அன்னுார்; அபாய நிலையில் அங்கன்வாடி கட்டடம் உள்ளதால், குமாரபாளையம் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
அன்னுார் பேரூராட்சியில், அ. குமாரபாளையத்தில், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகத்தில், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ், அங்கன்வாடி மையம் செயல்படுகிறது.
இம்மையத்தில் இரண்டு வயது முதல் ஆறு வயது வரையிலான 33 குழந்தைகள் கல்வி கற்று வருகின்றன. இக்குழந்தைகளுக்கு சத்து மாவு உள்ளிட்ட சத்தான உணவுப் பொருட்கள் வழங்கப்படுகின்றன.
அங்கன்வாடி மைய கட்டிடம் கட்டப்பட்டு 30 ஆண்டுகளுக்கு மேலாகி விட்டது. கட்டிடத்தின் மேல் கூரை பல இடங்களில் சேதமடைந்துள்ளது. சிமென்ட் காரைகள் பெயர்ந்து விழுகிறது. தரைத்தளம், சுவர், ஓடு என அனைத்தும் சேதமடைந்துள்ளது. இதுகுறித்து பெற்றோர் கூறுகையில்,'மழை வந்தால் அங்கன்வாடி மையத்திற்குள் மழை நீர் அருவி போல் கொட்டுகிறது. கடந்த வாரம்மையத்தின் வாசல் வரை பாம்பு வந்தது. இதுகுறித்து ஊராட்சி ஒன்றிய அலுவலகம், பேரூராட்சி அலுவலகம் மற்றும் கலெக்டர் அலுவலகத்தில் பலமுறை புகார் தெரிவித்துவிட்டோம்.
கடந்த மாதம், உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் இங்கு வந்த கோவை கலெக்டரிடமும் நேரடியாக புகார் தெரிவித்தோம். ஆனாலும் எந்த நடவடிக்கையும் இல்லை. இதனால் அங்கன்வாடிக்கு குழந்தைகளை அனுப்ப பயமாக உள்ளது.
எனவே, அரசு உடனடியாக இதே வளாகத்தில் புதிதாக அங்கன்வாடி மைய கட்டடம் கட்டித் தர வேண்டும்,' என்றனர்.