/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அங்கன்வாடி பணியாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்
/
அங்கன்வாடி பணியாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்
ADDED : பிப் 04, 2026 05:11 AM

கோவை: காலமுறை ஊதியம் வழங்கக் கோரி, சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களை நிரப்புதல், தற்காலிக பணிநீக்க காலத்தில் பிழைப்பூதியம் வழங்குதல், ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி, தேசிய மருத்துவக் காப்பீடு மற்றும் அரசு ஊழியர்களுக்கு இணையான மகப்பேறு விடுப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கலெக்டர் அலுவலகம் முன்பு இந்த போராட்ட ம் நடைபெற்றது.
கோரிக்கைகள் நிறைவேறும் வரை கலைந்து செல்ல மாட்டோம் என கூறி, திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. 800 பேரை போலீசார் கைது செய்தனர்.
வேலைநிறுத்தம் குறித்து அதிகாரிகள், 'பள்ளிகளில் மதிய உணவு வழங்க மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. முதலமைச்சரின் காலை உணவு திட்ட பணியாளர்களை கொண்டு, மதிய உணவு சமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்போது 3 முதல் 4 வட்டாரங்களை சேர்ந்த பணியாளர்கள் மட்டுமே போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், மாற்று பணியாளர்கள் மூலம் பணிகள் தொய்வின்றி நடைபெறுகின்றன' என தெரிவித்தனர்.

