sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

மத்திய அரசின் போஷான் திட்டத்தில் நவீனமாகும் அங்கன்வாடிகள்! மேம்படுத்தப்பட்ட 30 'சக் ஷம்' மையங்கள்

/

மத்திய அரசின் போஷான் திட்டத்தில் நவீனமாகும் அங்கன்வாடிகள்! மேம்படுத்தப்பட்ட 30 'சக் ஷம்' மையங்கள்

மத்திய அரசின் போஷான் திட்டத்தில் நவீனமாகும் அங்கன்வாடிகள்! மேம்படுத்தப்பட்ட 30 'சக் ஷம்' மையங்கள்

மத்திய அரசின் போஷான் திட்டத்தில் நவீனமாகும் அங்கன்வாடிகள்! மேம்படுத்தப்பட்ட 30 'சக் ஷம்' மையங்கள்


ADDED : ஜன 03, 2025 10:39 PM

Google News

ADDED : ஜன 03, 2025 10:39 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

 ...பொள்ளாச்சி : பொள்ளாச்சி வடக்கு மற்றும் தெற்கு ஒன்றியத்தில், ஊட்டச்சத்து மற்றும் கல்வியின் தரத்தை மேம்படுத்தும் நோக்கில், 30 'சக் ஷம்' அங்கன்வாடிகள் உருவாக்கப்பட்டுள்ளன.

பொள்ளாச்சி வடக்கு ஒன்றியத்தில் 106 அங்கன்வாடி மையங்களில், 1,780 குழந்தைகள்; தெற்கு ஒன்றியத்தில் உள்ள, 99 அங்கன்வாடி மைங்களில், 1,750 குழந்தைகள்; ஆனைமலை ஒன்றியத்தில், 106 அங்கன்வாடி மையங்களில், 1,950 குழந்தைகள்; கிணத்துக்கடவு ஒன்றியத்தில், 74 அங்கன்வாடி மையங்களில், 1,260 குழந்தைகள் முன்பருவ கல்வி பயின்று வருகின்றனர்.

இங்கு, மையங்களை சுற்றியுள்ள, இரு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு சத்துமாவு வழங்குதல், பாதுகாத்தல் உள்ளிட்ட பணிகள் நடக்கின்றன. இதேபோல, இரண்டு முதல் ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு, சத்துமாவு, மதிய உணவுடன், கல்வி கற்பிக்கப்படுகிறது.

இந்நிலையில், மத்திய அரசின் ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு சேவை மற்றும் போஷான் திட்டத்தின் கீழ், தேர்வு செய்யப்பட்ட அங்கன்வாடிகள் மறு சீரமைக்கப்பட்டு, 'சக் ஷம்' அங்கன்வாடிகளாக மாற்றப்பட்டுள்ளன.

அதன்படி, ஊட்டச்சத்து மற்றும் கல்வியில், தரத்தை மேம்படுத்தும் வடக்கு ஒன்றியத்தில், ஜமீன்முத்துார், ஆலாம்பாளையம், கோவிந்தனுார், ஆர்.கோபாலபுரம் அங்கன்வடிகள், 'சக் ஷம்' அங்கன்வாடிகளாகவும்; தெற்கு ஒன்றியத்தில், கோலார்பட்டி, கோமங்கலம்புதுார், மாக்கினாம்பட்டி -- -1, சிங்காநல்லுார், குஞ்சிபாளையம் -- -1, ரயில்வே ஸ்டேஷன், ரங்கசமுத்திரம், கஞ்சம்பட்டி, மாமரத்துப்பட்டி மற்றும் கெட்டிமல்லன்புதுார் அங்கன்வாடிகள், 'சக் ஷம்' அங்கன்வாடிகளாகவும் மாற்றப்பட்டுள்ளது.

ஆனைமலை ஒன்றியத்தில், காந்தி நகர், ஆனைமலை - அண்ணா நகர், பெத்தநாயக்கனுார் - அண்ணா நகர், வேடசெந்துார், குப்புச்சிபுதுார் ஆகிய ஐந்து மையங்கள் 'சக் ஷம்' அங்கன்வாடிகளாக மேம்படுத்தப்படுகின்றன.

கிணத்துக்கடவு ஒன்றியத்தில், கிணத்துக்கடவு, வடசித்துார் கடைவீதி தெரு, கோவில்பாளையம், எஸ்.மேட்டுப்பாளையம், மில்கோவில்பாளையம், கோவிந்தகவுண்டனுார், அரசம்பாளையம், சிக்கலாம்பாளையம், சட்டக்கல்புதுார், சிங்கையன்புதுார் ஆகிய, 10 மையங்கள் 'சக் ஷம்' அங்கன்வாடிகளாக மேம்படுத்தப்படுகின்றன.

குறிப்பாக, இந்த அங்கன்வாடிகள், தலா ஒரு லட்சம் ரூபாய் மதிப்பில், 'பென் டிரைவ்' உடன் கூடிய எல்.இ.டி., டிவி, மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு, பீரோ, கற்றல் உதவி ஓவியங்கள், சமையல் பாத்திரங்கள், சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் போன்ற மேம்படுத்தப்பட்ட உள்கட்டமைப்புகளாக மாற்றியமைக்கப்பட்டுள்ளன.

காய்கறி, பழத்தோட்டம் அமைகிறது!

குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் வீணா கூறியதாவது:'சக் ஷம்' அங்கன்வாடிகள் செயல்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. ஏற்கனவே, அங்கன்வாடிகளில், கே.ஜி., வகுப்புகளை போல், விளையாட்டு வழி கல்வி, ரைம்ஸ் எனப்படும் பாடல்கள் இசைத்தல், செய்கை வழியில் புரிய வைத்தல் என வகுப்புகள் நடத்தப்படுகின்றன.'சக் ஷம்' அங்கன்வாடிகளை பொறுத்தமட்டில், தனியார் கல்வி நிறுவனங்களுக்கு இணையாக பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டு, குழந்தைகள் சேர்க்கை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.இந்த அங்கன்வாடி மையங்களில், தோட்டக்கலை துறையுடன் இணைந்து, காய்கறி மற்றும் பழத்தோட்டங்கள் அமைக்கப்படவும் உள்ளது. அதன் வாயிலாக கிடைக்கப்பெறும் காய்கறிகள் மற்றும் பழங்கள், பயனாளிகளுக்கு வழங்கப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.








      Dinamalar
      Follow us