/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோபமே மனிதனின் முதல் எதிரி; தமிழ்ச் சங்க விழாவில் பேச்சு தமிழ்ச் சங்க விழாவில் பேச்சு

ADDED : ஜன 18, 2025 12:14 AM
அன்னுார், ;கவையன்புத்தூர் தமிழ் சங்கத்தின் 68வது நிகழ்ச்சி, இளைஞர் நாள் விழா,திருவள்ளுவர் நாள் விழாஉள்ளிட்ட ஐம்பெரும் விழா நல்ல கவுண்டன்பாளையம், பிரபஞ்ச அமைதி ஆசிரமத்தில் நடந்தது.
ஆசிரம குருஜி சிவாத்மா, இறை வழிபாடு செய்து, மாடுகளுக்கு பழம், பொங்கல் கொடுத்து, விழாவை துவக்கி வைத்தார். உதவி பேராசிரியர் கணேசன் வரவேற்றார்.
நந்தனம் அரசு கலைக் கல்லூரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி பேசுகையில், ''இளைய தலைமுறையினர் பண்பாடும், பாரம்பரியமும் மாறாமல்,தங்களது வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும்,'' என்றார்.
ராமகிருஷ்ணா மிஷன்வித்யாலயா கல்லூரி முன்னாள் பேராசிரியர்வேலுச்சாமி பேசுகையில், ''பிள்ளைகளின் ஈடுபாடும், ஆர்வமும், எதில் அதிகம்இருக்கிறதோ, அத்துறையில் அவர்கள் கல்வி அறிவு பெறவும், தொழில் செய்யவும், கற்றுத் தர வேண்டும். பெற்றோர் தங்களது விருப்பத்திற்கு ஒரு துறையை திணிக்க கூடாது,'' என்றார்.
பேராசிரியர் ராமலிங்கம் பேசுகையில், ''உற்சாகமாக ஊக்கத்துடன் எதையும் செய்தால் சாதிக்கலாம்,'' என்றார்.
பணி நிறைவு தலைமை ஆசிரியை சாந்தி பேசுகையில், ''இன்னல்கள் அடுக்கடுக்காய் வந்தாலும், அயராது ஊக்கத்துடன் பணி செய்தால் வெற்றி தானாக வரும்.
கண்கலங்குவதும், மனச்சோர்வும், பயமுமே ஒரு மனிதனை தோல்வியாளனாக ஆக்குகிறது. கோபமே மனிதனின் முதல் எதிரி,'' என்றார்.