தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ கால்நடை பராமரிப்பு தொழில்நுட்ப பயிற்சி

 கால்நடை பராமரிப்பு தொழில்நுட்ப பயிற்சி

 கால்நடை பராமரிப்பு தொழில்நுட்ப பயிற்சி


ADDED : பிப் 13, 2026 05:12 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 13, 2026 05:12 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு கால்நடை மருத்துவமனையில், கால்நடை பராமரிப்பு தொழில்நுட்ப பயிற்சி திட்டம் குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

கிணத்துக்கடவு கால்நடை மருத்துவமனையில், வட்டார அளவில் விவசாயிகளுக்கான கால்நடை பராமரிப்பு தொழில்நுட்ப பயிற்சிகள் வழங்கப்பட்டது. இதில், மண்டல இணை இயக்குனர் மருத்துவர் இளங்கோ, பொள்ளாச்சி உதவி இயக்குனர் சக்களா பாபு, மருத்துவர் அருள் மற்றும் மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள் என, பலர் கலந்து கொண்டனர்.

இதில், விவசாயிகளுக்கு தாதுஉப்புக்கள், மண்புழு உரம் மற்றும் பயிற்சி கையேடு வழங்கப்பட்டது. மேலும், மண்புழு உரம் தயாரிப்பது எப்படி, தாதுஉப்பு கலவை பயன்பாடு, புல் அறுக்கும் கருவி, பாலில் இருந்து தயாரிக்கப்படும் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களான தயிர், வெண்ணெய், நெய், பன்னீர் கட்டி உள்ளிட்டவை குறித்து தெரிவிக்கப்பட்டது.

இதே போன்று, நெகமம் பகுதியிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட, 100 விவசாயிகளுக்கு கால்நடை வளர்ப்பு தொழில்நுட்ப பயிற்சிகள் அளிக்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us