/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அண்ணா பல்கலை கூடைப்பந்து; எஸ்.என்.எஸ்., கல்லுாரி முதலிடம்
/
அண்ணா பல்கலை கூடைப்பந்து; எஸ்.என்.எஸ்., கல்லுாரி முதலிடம்
அண்ணா பல்கலை கூடைப்பந்து; எஸ்.என்.எஸ்., கல்லுாரி முதலிடம்
அண்ணா பல்கலை கூடைப்பந்து; எஸ்.என்.எஸ்., கல்லுாரி முதலிடம்
ADDED : செப் 25, 2024 08:55 PM
கோவை : அண்ணா பல்கலை கூடைப்பந்து போட்டியில், எஸ்.என்.எஸ்., இன்ஜி., கல்லுாரி அணி முதலிடம் பிடித்தது.
அண்ணா பல்கலைக்கு உட்பட்ட கல்லுாரிகளுக்கு இடையேயான விளையாட்டு போட்டிகள் கடந்த, 20ம் தேதி முதல் நடந்து வருகின்றன. எஸ்.என்.எஸ்., தொழில்நுட்ப கல்லுாரியில், பெண்களுக்கான கூடைப்பந்து போட்டிகள் நடந்தன.
இதில், பல்வேறு சுற்றுக்களை தொடர்ந்து முதல் அரையிறுதியில், எஸ்.என்.எஸ்., இன்ஜி., கல்லுாரி அணி, 29-6 என்ற புள்ளி கணக்கில், குமரகுரு தொழில்நுட்ப கல்லுாரி அணியை வென்றது.
இரண்டாம் அரையிறுதியில், ஸ்ரீ ராமகிருஷ்ணா இன்ஜி., கல்லுாரி அணி, 20-17 என்ற புள்ளி கணக்கில் அரசு தொழில்நுட்ப கல்லுாரி அணியை வென்று, இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றன.
இறுதிப்போட்டியில், எஸ்.என்.எஸ்., இன்ஜி., கல்லுாரி அணி, 24-2 என்ற புள்ளிக்கணக்கில், ஸ்ரீ ராமகிருஷ்ணா இன்ஜி., கல்லுாரி அணியை வென்று, முதலிடம் பிடித்தது.