/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அண்ணா பல்கலை கூடைப்பந்து போட்டி
/
அண்ணா பல்கலை கூடைப்பந்து போட்டி
ADDED : செப் 26, 2024 11:49 PM

கோவை : அண்ணா பல்கலைக்கு உட்பட்ட கல்லுாரிகளுக்கு இடையேயான கூடைப்பந்து இறுதிப்போட்டிக்கு குமரகுரு கல்லுாரியும், கே.ஜி.ஐ.எஸ்.எல்., கல்லுாரி அணிகளும் தகுதிபெற்றன.
அண்ணா பல்கலைக்கு உட்பட்ட கல்லுாரிகளுக்கு இடையேயான(11வது மண்டலம்) ஆண்களுக்கான கூடைப்பந்து போட்டி குமரகுரு தொழில்நுட்ப கல்லுாரியில் நேற்று துவங்கியது; இன்று நிறைவடைகிறது. இதில், 9 அணிகள் பங்கேற்றன.
காலிறுதி போட்டியில், குமரகுரு தொழில்நுட்ப கல்லுாரி அணி, 58-17 என்ற புள்ளி கணக்கில் ஸ்ரீ சாய் ரங்கநாதர் இன்ஜி., கல்லுாரி அணியை வென்றது. எஸ்.என்.எஸ்., இன்ஜி., கல்லுாரி அணி, 51-20 என்ற புள்ளி கணக்கில் இன்போ கல்லுாரி அணியை வென்றது.
கோவை அரசு தொழில்நுட்ப கல்லுாரி அணி, 61-51 என்ற புள்ளி கணக்கில் எஸ்.என்.எஸ்., தொழில்நுட்ப கல்லுாரி அணியை வென்றது. 'பை லெவல்' அடிப்படையில் கே.ஜி.ஐ.எஸ்.எல்., அணி அரையிறுதிக்கு நேரடியாக தகுதிபெற்றது.
தொடர்ந்து நடந்த முதல் அரையிறுதி போட்டியில், குமரகுரு தொழில்நுட்பக் கல்லுாரி அணி, 76-34 என்ற புள்ளி கணக்கில் எஸ்.என்.எஸ்., இன்ஜி., கல்லுாரி அணியை வென்றது. இரண்டாம் அரையிறுதியில் கே.ஜி.ஐ.எஸ்.எல்., அணி, 56-31 என்ற புள்ளிக்கணக்கில் அரசு தொழில்நுட்ப கல்லுாரி அணியை வென்று இறுதி போட்டிக்கு தகுதிபெற்றன. தொடர்ந்து, இறுதிப்போட்டி நடத்தப்பட்டு இன்று பரிசுகள் வழங்கப்படுகின்றன.