/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அண்ணா பல்கலை ஹேண்ட்பால் போட்டி; ராமகிருஷ்ணா கல்லுாரி அணி முதலிடம்
/
அண்ணா பல்கலை ஹேண்ட்பால் போட்டி; ராமகிருஷ்ணா கல்லுாரி அணி முதலிடம்
அண்ணா பல்கலை ஹேண்ட்பால் போட்டி; ராமகிருஷ்ணா கல்லுாரி அணி முதலிடம்
அண்ணா பல்கலை ஹேண்ட்பால் போட்டி; ராமகிருஷ்ணா கல்லுாரி அணி முதலிடம்
ADDED : செப் 30, 2024 11:45 PM

கோவை : ஆண்களுக்கான ஹேண்ட் பால் போட்டியில் ராமகிருஷ்ணா இன்ஜி., கல்லுாரி அணி, குமரகுரு கல்லுாரி அணியை வென்று முதலிடம் பிடித்தது.
அண்ணா பல்கலைக்கு உட்பட்ட கல்லுாரிகளுக்கு இடையே(11வது மண்டலம்) ஆண்களுக்கான ஹேண்ட்பால் போட்டி ராமகிருஷ்ணா இன்ஜி., கல்லுாரியில் நடந்தது.
'நாக்-அவுட்' முறையில் எட்டு அணிகள் பங்கேற்ற போட்டிகளை அண்ணா பல்கலை மண்டல உடல் பயிற்சி பயிற்றுவிப்பாளர்(தேர்வு நிலை) சரவணமூர்த்தி தொடங்கி வைத்தார்.
முதல் காலிறுதி போட்டியில், எஸ்.என்.எஸ்., இன்ஜி., கல்லுாரி அணி, 12-4 என்ற கோல் கணக்கில், கோவை அண்ணா பல்கலை அணியை வென்றது. இரண்டாவது காலிறுதியில் எஸ்.என்.எஸ்., தொழில்நுட்ப கல்லுாரி அணி, பி.பி.ஜி., கல்லுாரி அணியை, 15-9 என்ற கோல் கணக்கில் வென்றது.
மூன்றாவது காலிறுதியில், ராமகிருஷ்ணா இன்ஜி., கல்லுாரி அணி, காரமடை ஸ்ரீ சக்தி இன்ஜி., கல்லுாரி அணியை, 23-7 என்ற கோல் கணக்கிலும், நான்காவது காலிறுதியில் குமரகுரு தொழில்நுட்ப கல்லுாரி அணி, அரசு தொழில்நுட்ப கல்லுாரி அணியுடன், 16-13 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
முதல் அரையிறுதி போட்டியில், ராமகிருஷ்ணா இன்ஜி., கல்லுாரி அணி, எஸ்.என்.எஸ்., இன்ஜி., கல்லுாரி அணியை, 19-8 என்ற கோல் கணக்கில் வென்றது. இரண்டாம் அரையிறுதியில், குமரகுரு கல்லுாரி அணி, எஸ்.என்.எஸ்., தொழில்நுட்ப கல்லுாரி அணியை, 18-13 என்ற கோல் கணக்கில் வென்றது.
இறுதிப் போட்டியில், ராமகிருஷ்ணா இன்ஜி., கல்லுாரி அணி, 13-10 என்ற கோல் கணக்கில் குமரகுரு கல்லுாரி அணியை வென்று முதலிடம் பிடித்தது.
மூன்றாம் இடத்துக்கான போட்டியில், எஸ்.என்.எஸ்., இன்ஜி., கல்லுாரி அணி, எஸ்.என்.எஸ்., தொழில்நுட்ப கல்லுாரி அணியை, 9-8 என்ற கோல் கணக்கில் வென்று, மூன்றாம் இடத்தை பிடித்தது.
வெற்றி பெற்ற அணியினருக்கு, ராமகிருஷ்ணா இன்ஜி., கல்லுாரி முதல்வர் சவுந்தர்ராஜன் கோப்பைகள் வழங்கினார்.
உடற்கல்வி இயக்குனர் நித்தியானந்தன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.