தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ அண்ணாதுரை பிறந்த நாள் விழா 

அண்ணாதுரை பிறந்த நாள் விழா 

அண்ணாதுரை பிறந்த நாள் விழா 


ADDED : செப் 15, 2026 07:13 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 15, 2026 07:13 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் அ.தி.மு.க., – தி.மு.க., சார்பில் அண்ணாதுரை பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. 

 பொள்ளாச்சி புது பஸ் ஸ்டாண்டில், கோவை புறநகர் தெற்கு மாவட்ட அ.தி.மு.க., சார்பில், மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணாதுரையின், 118வது பிறந்த நாள் விழாவில். மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் தலைமை வகித்து, அண்ணாதுரை உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நகரச்செயலாளர் கிருஷ்ணகுமார், முன்னாள் எம்.எல்.ஏ., கஸ்துாரி, நிர்வாகிகள் பங்கேற்றனர். 

 திருவள்ளுவர் திடலில் தெற்கு நகர தி.மு.க., சார்பில் நடந்த விழாவில், தெற்கு நகர பொறுப்பாளர் அமுதபாரதி தலைமை வகித்தார். அண்ணாதுரை உருவப்படத்துக்கு மலர்துாவி மரியாதை செலுத்தப்பட்டது. நகராட்சி துணைத்தலைவர் கவுதமன், கவுன்சிலர் செந்தில்குமார் உள்பட பலர் பங்கேற்றனர். 

பொள்ளாச்சி தி.மு.க., அலுவலகத்தில் வடக்கு நகர தி.மு.க., சார்பில் நடந்த விழாவில் வடக்கு நகர பொறுப்பாளர் நவநீதகிருஷ்ணன் தலைமை வகித்தார். மாநில ஆதிதிராவிடர் நலக்குழு இணைச்செயலாளர் ஆறுச்சாமி, அண்ணாதுரை குறித்து பேசினார். நகர நிர்வாகிகள் உள்பட பலர் பங்கேற்றனர். 

ஜமீன் ஊத்துக்குளி பேரூராட்சி கைகாட்டியில் தி.மு.க., சார்பில் நடந்த விழாவில், பேரூராட்சி தலைவர் அகத்துார் சாமி தலைமை வகித்தார். துணை தலைவர் அபுதாஹிர் முன்னிலை வகித்தார்.

கிணத்துக்கடவு அண்ணாதுரை பிறந்தநாளையொட்டி கிணத்துக்கடவு புது பஸ் ஸ்டாண்டில் உள்ள அண்ணாதுரை சிலைக்கு தி.மு.க., கட்சி சார்பில் மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது.

இதில், கிணத்துக்கடவு தி.மு.க., செயலாளர் கனகராஜ், பேரூராட்சி தலைவர் கதிர்வேல் மற்றும் கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.

வால்பாறை வால்பாறை நகர அ.தி.மு.க., சார்பில் முன்னாள் முதல்வர் அண்ணாத்துரையின், 118 வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவில் தமிழ்நாடு தேயிலை தோட்ட மாநில தலைவர் அமீது, நகர செயலாளர் மயில்கணேஷ் ஆகியோர் அண்ணாசிலைக்கு மாலை அணிவித்தார்.

விழாவில் நகர துணை செயலாளர் பொன்கணேஷ், மாவட்ட பாசறை இணை செயலாளர் சலாவுதீன், அவைத்தலைவர் பாலு உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தி.மு.க., சார்பில் நடைபெற்ற அண்ணாபிறந்த நாள் விழாவில் எம்.எல்.ஏ.,சுதாகர்  தலைமையில் கட்சியினர் ஊர்வலமாக சென்று அண்ணாசிலைக்கு  மாலை அணிவித்தனர். விழாவில் முன்னாள் நகராட்சித்தலைவர் கணேசன், நகராட்சி துணை தலைவர் செந்தில்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us