/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அண்ணாதுரை நினைவு தினம்; கட்சியினர் அனுசரிப்பு
/
அண்ணாதுரை நினைவு தினம்; கட்சியினர் அனுசரிப்பு
ADDED : பிப் 03, 2025 11:41 PM

- நிருபர் குழு -
பொள்ளாச்சி அ.தி.மு.க., எம்.எல்.ஏ., அலுவலகத்தில், மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணாதுரையின், 56-ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. எல்.எம்.ஏ., பொள்ளாச்சி ஜெயராமன் தலைமை வகித்தார். நகரச் செயலாளர் கிருஷ்ணகுமார் முன்னிலை வகித்தார். அண்ணாதுரையின் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
ஜமீன்ஊத்துக்குளி கைகாட்டியில், தி.மு.க., சார்பில் பேரூராட்சி தலைவர் அகத்துார்சாமி தலைமையில், அண்ணாதுரையின் திருவுருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
கோவை தெற்கு மாவட்ட தி.மு.க., சார்பில், மகாலிங்கபுரம் கோவை ரோடு சந்திப்பு பகுதியில் இருந்து, பஸ் ஸ்டாண்ட் வரை மவுன அஞ்சலி ஊர்வலம் நடத்தினர். மாவட்டச் செயலாளர் முருகேசன் தலைமை வகித்தார். தொடர்ந்து, பஸ் ஸ்டாண்டில், அண்ணாதுரையின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதையும் செலுத்தப்பட்டது.
* வால்பாறையில் தி.மு.க.,சார்பில், அவைத்தலைவர் செல்லமுத்து தலைமையில் கட்சியினர் அண்ணாதுரை சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நகராட்சி தலைவர் அழகுசுந்தரவள்ளி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
அ.தி.மு.க., சார்பில் நடந்த நிகழ்ச்சியில்,நகர செயலாளர் மயில்கணேஷ் தலைமையில் கட்சி நிர்வாகிகள், அண்ணாதுரை சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். ஏ.டி.பி., தொழிற்சங்க மாநிலத்தலைவர் அமீது உட்பட பலர் கலந்து கொண்டனர்.
* உடுமலையில் பஸ் ஸ்டாண்ட் அருகேயுள்ள அண்ணாதுரை சிலைக்கு, நகர தி.மு.க.,சார்பில், மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நகரச்செயலாளர் வேலுசாமி தலைமை வகித்தார். திருப்பூர் தெற்கு மாவட்ட தலைவர் ஜெயராமகிருஷ்ணன், நகராட்சி தலைவர் மத்தீன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க., சார்பில், உடுமலை பஸ் ஸ்டாண்ட் அருகே அண்ணாதுரை சிலைக்கு, மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மாவட்ட செயலாளர் உடுமலை எம்.எல்.ஏ., ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். நகர செயலாளர் ஹக்கீம், மாவட்ட இணைச்செயலாளர் சாஸ்திரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.