/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அண்ணாதுரை பிறந்தநாள்; கட்சியினர் மரியாதை
/
அண்ணாதுரை பிறந்தநாள்; கட்சியினர் மரியாதை
ADDED : செப் 15, 2025 09:20 PM

பொள்ளாச்சி; மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணாதுரையின், 117வது பிறந்த நாள் விழா, பொள்ளாச்சி எம்.எல்.ஏ. அலுவலக வளாகத்தில் நடந்தது. அண்ணாதுரை திருவுருவபடத்துக்கு, எம்.எல்.ஏ. பொள்ளாச்சி ஜெயராமன் மலர்துாவி மரியாதை செலுத்தினார். நகர செயலாளர் கிருஷ்ணகுமார், ஒன்றிய செயலாளர்கள் சக்திவேல், திருஞானசம்பந்தம் முன்னிலை வகித்தனர்.
பொதுக்குழு உறுப்பினர் சுப்ரமணியம், மாவட்ட பிரதிநிதி அருணாச்சலம், மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுநர் அணி செயலாளர் முருகன் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
* பொள்ளாச்சி நகர வடக்கு தி.மு.க. சார்பில் நடந்த விழாவில், வடக்கு நகர பொறுப்பாளர் நவநீதகிருஷ்ணன் தலைமை வகித்தார். நகராட்சி தலைவர் சியாமளா, துணை செயலாளர் தர்மராஜ், துணை தலைவர் கவுதமன் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
* தெற்கு நகர தி.மு.க. சார்பில் நடந்த விழாவில், தெற்கு நகர பொறுப்பாளர் அமுதபாரதி தலைமை வகித்தார். மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளர் சதீஷ்குமார் வரவேற்றார்.
முன்னாள் அமைச்சர் கண்ணப்பன், அண்ணாதுரை படத்துக்கு மலர் துாவி மரியாதை செலுத்தினார். தலைமை கழகத்தால் வழங்கப்பட்ட உறுதி மொழியினை சட்ட திட்ட குழு உறுப்பினர் செல்வராஜ் வாசித்தார். மாநில விவசாய அணி துணை தலைவர் தமிழ்மணி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சபரிகார்த்திக்கேயன், கவுன்சிலர் செந்தில்குமார் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
வால்பாறை *வால்பாறை தி.மு.க.,சார்பில் நடந்த விழாவில், நகர செயலாளர் சுதாகர் அண்ணாதுரை சிலைக்கு மாலை அணிவித்தார். நகராட்சி நகராட்சி தலைவர் அழகுசுந்தரவள்ளி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
* முன்னாள் நகராட்சி தலைவர் கணேசன் தலைமையில், தமிழ்நாடு துாய்மை பணியாளர் நலவாரிய தலைவர் ஆறுச்சாமி, அண்ணாதுரை சிலைக்கு மாலை அணிவித்தார். எல்.பி.எப்., தொழிற்சங்க செயலாளர் வக்கீல் வினோத்குமார் தலைமையில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
* அ.தி.மு.க., சார்பில் நடந்த விழாவில் நகர துணை செயலாளர் பொன்கணேஷ் தலைமையில், அண்ணாதுரை சிலைக்கு கட்சியினர் மாலை அணிவித்தனர். வர்த்தக அணி செயலாளர் சண்முகவேல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
* அ.தி.மு.க., தொழிற்சங்கத்தின் சார்பில் நடைபெற்ற விழாவில், ஏ.டி.பி., தொழிற்சங்க தலைவர் அமீது, கட்சி நிர்வாகிகளுடன் ஊர்வலமாக வந்து அண்ணாதுரை சிலைக்கு மாலை அணிவித்தார். மாவட்ட பாசறை இணை செயலாளர் சலாவுதீன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
உடுமலை * உடுமலை பஸ் ஸ்டாண்ட் அருகில், தி.மு.க., சார்பில், அண்ணாதுரை படத்திற்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தப்பட்டது. தி.மு.க., நகரச்செயலாளர் வேலுசாமி தலைமை வகித்தார்.
* பெரிய கோட்டை ஊராட்சி காமராஜர் நகர் பகுதியில், அண்ணாதுரை பிறந்த நாள் விழா தி.மு.க., சார்பில் கொண்டாடப்பட்டது. தெற்கு மாவட்ட செயலாளர் பத்மநாபன் தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் மெய்ஞான மூர்த்தி உள்ளிட்ட கட்சியினர் பங்கேற்றனர்.
* அ.தி.மு.க., சார்பில், எம்.எல்.ஏ., ராதாகிருஷ்ணன் தலைமையில், அக்கட்சியினர் அண்ணாதுரை படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.