ADDED : ஜூன் 05, 2025 01:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை; பா.ஜ., முன்னாள் மாநில தலைவரும், தேசிய பொதுக்குழு உறுப்பினராகவும் உள்ள, அண்ணாமலையின் பிறந்தநாள் விழா, நேற்று கோவையில் பிரம்மாண்டமான முறையில் கொண்டாடப்பட்டது.
பீளமேடு வரதராஜபுரம் சாய்விவாஹா மஹாலில், 1,000 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங் கப்பட்டன. சிங்காநல்லுார் இ.எஸ்.ஐ.,மருத்துவமனையில் பிறந்த குழந்தைகள் ஐந்து பேருக்கு, தங்கமோதிரம் அணிவிக்கப்பட்டது.
தொண்டர்கள் ரத்ததானம் செய்தனர். கோவில்களில் அண்ணாமலை பெயரில் சிறப்பு வழிபாடும், தங்கத்தேர் இழுக்கும் வைபவமும் நடந்தது. ஆட்டோ டிரைவர்களுக்கு சீருடை வழங்கப்பட்டது.
காளப்பட்டி திருமண மண்டபத்தில் பிரம்மாண்ட கேக் வெட்டி, தொண்டர்கள் பகிர்ந்து கொண்டனர். ரயில்வே ஸ்டேஷன், காந்திபுரம், பீளமேடு பகுதிகளில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.