/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அரசு நடுநிலைப்பள்ளியில் ஆண்டு விழா கொண்டாட்டம்
/
அரசு நடுநிலைப்பள்ளியில் ஆண்டு விழா கொண்டாட்டம்
ADDED : மார் 18, 2025 03:58 AM

பொள்ளாச்சி : பொள்ளாச்சி அருகே, தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், 26ம் ஆண்டு விழா நடந்தது. வெள்ளாளபாளையம் முன்னாள் ஊராட்சி தலைவர் பத்மபிரியா தலைமை வகித்தார். தலைமையாசிரியர் கணேசன் முன்னிலை வகித்தார். ஆசிரியர் மகாலட்சுமி வரவேற்றார். ஆசிரியர் தேவி ஆண்டறிக்கையை படித்தார்.
ஆண்டுவிழாவையொட்டி மாணவர்களுக்கு இடையே, ஓட்டப்பந்தயம், இசை நாற்காலி, பலுான் உடைத்தல், பாட்டிலில் நீர் நிரப்புதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றன.
வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களும், பரிசு பொருட்களும் வழங்கப்பட்டன. கடந்த, 2024 - 25ம் கல்வியாண்டில் பள்ளிக்கு விடுப்பு எடுக்காமல் வந்த மாணவர்களுக்கும், பள்ளியில் நடந்த அறிவியல் கண்காட்சியில் காட்சிப்படுத்தி விளக்கமளித்த மாணவர்கள், மாவட்ட அளவிலான கலைத்திருவிழாவில் பங்கேற்ற மாணவர்களுக்கும் பரிசுடன் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
இந்தாண்டின் சிறந்த மாணவர் தலைவர்களாக தரணிதரன், ஹரிபிரித்திவ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினர் தங்கமணி, பள்ளி மேலாண்மை குழு தலைவர் அய்யம்மாள், உறுப்பினர்கள் பேசினர். தொடர்ந்து, மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஆசிரியர்கள் மணிவேல், உஷா ஆகியோர் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து நடத்தினர்.