ADDED : பிப் 17, 2025 10:58 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு அரசு மேல்நிலைப்பள்ளியில், விளையாட்டு போட்டிகள் மற்றும் ஆண்டு விழா நிகழ்ச்சிகள் நடந்தது.
கிணத்துக்கடவு அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆண்டு விழா நடந்தது. இதில், மாணவர்களுக்கான விளையாட்டுப்போட்டிகள் நடைபெற்றன.
ஜூனியர் மற்றும் சீனியர் ஆண்கள், பெண்கள் என தனித்தனியாக 100, 200 மீட்டர் ஓட்டப்பந்தயம், தொடர் ஓட்டம், தடை தாண்டும் ஓட்டம் போன்ற போட்டிகள் இடம்பெற்றன.
தொடர்ந்து, மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. இதில், மாணவர்கள் நடனம், பாட்டு, நாடகம் உள்ளிட்டவைகளில் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.
விளையாட்டுப்போட்டி, கல்வி மற்றும் ஆண்டு விழாவில், வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. தலைமை ஆசிரியர் தேன்மொழி, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர்.

