sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

இலவச திருமணத்துக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு 

/

இலவச திருமணத்துக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு 

இலவச திருமணத்துக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு 

இலவச திருமணத்துக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு 


ADDED : ஜூன் 04, 2025 08:57 PM

Google News

ADDED : ஜூன் 04, 2025 08:57 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி; திருக்கோவில்களில் இலவச திருமணம் அடுத்த மாதம் நடத்தப்பட உள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் கோவில்களில் வழங்கப்படுகிறது, என, ஹிந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தமிழகத்தில் உள்ள கோவில்களில், சட்டசபை அறிவிப்பின்படி அடுத்த மாதம் ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில், கோவில் வாயிலாக, 4 கிராம் தங்கம் உள்பட, 70 ஆயிரம் ரூபாய் திட்ட செலவில் திருமணம் நடத்தப்படுகிறது.

அடுத்த மாதம், 7ம் தேதி திருமணம் நடைபெற உள்ளது. இத்திட்டப்படி திருமணம் செய்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள், கோவில் அலுவலகங்களில் பதிவு செய்து கொள்ளலாம்.

மணமக்களுக்கு முதல் திருமணமாக இருக்க வேண்டும். மணமகனுக்கு வயது, 21; மணமகளுக்கு, 18 ஆகவும், ஆண்டு வருமானம், இரண்டு லட்சம் ரூபாய்க்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பங்கள், இணை ஆணையர், உதவி ஆணையர், ஆய்வர்கள் அலுவலகங்கள், அனைத்து கோவில்களிலும் கிடைக்கும். இத்தகவலை, ஹிந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us