/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பள்ளிகளில் ஆண்டு விழா கோலாகலமாக கொண்டாட்டம்
/
பள்ளிகளில் ஆண்டு விழா கோலாகலமாக கொண்டாட்டம்
ADDED : மார் 18, 2025 09:49 PM

பொள்ளாச்சி; ஆனைமலை அருகே, கோபால்பதி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஆண்டுவிழா நடந்தது. வட்டார கல்வி அலுவலர் சின்னபராஜ் தலைமை வகித்தார். மாணவ, மாணவியரின் கலைநிகழ்ச்சி மட்டுமின்றி, மலைவாழ் மக்களின் பாரம்பரிய நடன நிகழ்ச்சியும் நடந்தது.
தொடர்ந்து, மாணவ, மாணவியர் இடையே கட்டுரை, கவிதை உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன. ஆசிரியர் பயிற்றுநர் விஜயபாஸ்கர், ஆசிரியர்கள், சுகாதாரத்துறை ஆய்வாளர் சர்வேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.* பொள்ளாச்சி, செம்பாகவுண்டர் காலனி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் ஆண்டு விழா, தனியார் மண்டபத்தில் நடந்தது. பள்ளி தலைமையாசிரியர் வரவேற்றார். தொடர்ந்து, மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், வார்டு உறுப்பினர்கள், பெற்றோர்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
வால்பாறை
வால்பாறை அடுத்துள்ள அய்யர்பாடி எஸ்டேட் முதல் பிரிவு, அரசு தொடக்கப்பள்ளியில் ஆண்டுவிழா, விளையாட்டு விழா, பரிசளிப்பு விழா என முப்பெரும் விழா, தலைமை ஆசிரியர் ஷீலா தலைமையில் நடந்தது.
ஆசிரியை எஸ்தர்செல்வி, பள்ளி மேலாண்மை குழு தலைவர் நந்தீஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பள்ளி மாணவ, மாணவியருக்கான பலுான் உடைத்தல் போட்டி, இசை நாற்காலி போட்டி, முறுக்கு கடித்தல், பாட்டு, பேச்சு, நடனம் உள்ளிட்ட பல்வேறு வகையான போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, வட்டார கல்வி அலுவலர் பன்னீர்செல்வம் பரிசு வழங்கினார்.