/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கல்லுாரியில் ஆண்டு விளையாட்டு போட்டி
/
கல்லுாரியில் ஆண்டு விளையாட்டு போட்டி
ADDED : மார் 17, 2025 09:32 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொள்ளாச்சி, : பொள்ளாச்சி, சரஸ்வதி தியாகராஜா கல்லுாரியில், ஆண்டு விளையாட்டு போட்டி நடந்தது. கல்லுாரித் தலைவர் சேதுபதி தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக ஒலிம்பிக் தடகள வீரர் கணபதி, கலந்து கொண்டார். தொடர்ந்து, தேசிய கொடி ஏற்றி, மாணவர்களின் அணிவகுப்பை ஏற்றுக் கொண்டார்.
மேலும், ''விளையாட்டு வீரர்களுக்கு வேலைவாய்ப்பு அதிகமாக உள்ளது. சுய ஒழுக்கம், பயிற்சி, அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்பட்டால் சர்வதேச அளவில் சாதிக்க முடியும்,'' என்றார். கல்லுாரி துணைத்தலைவர் வெங்கடேஷ், செயலாளர் விஜயமோகன், முதல்வர் வனிதாமணி, உடற்கல்வி ஆசிரியர் பாரதி ஆகியோர் உட்பட பலர் பங்கேற்றனர்.