/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கராத்தே போட்டியில் அன்னுார் மாணவர்கள் சாதனை
/
கராத்தே போட்டியில் அன்னுார் மாணவர்கள் சாதனை
ADDED : செப் 26, 2024 11:43 PM

அன்னுார் : தேசிய அளவிலான கராத்தே போட்டியில், அன்னுார் மாணவர்கள் பதக்கம் வென்றனர்.
கோவை ஜி.ஆர்.டி., கலை அறிவியல் கல்லூரியில், அகில இந்திய மோசஸ் மெமோரியல் கராத்தே சாம்பியன்ஸ் போட்டிகள் கைலாஷ் உள் விளையாட்டு அரங்கில் நடந்தது. கல்லூரி தலைவர் பத்மநாபன் தலைமை வகித்தார்.
பல மாநிலங்களில் இருந்து, 1,500 வீரர்கள் பங்கேற்றனர். பல்வேறு பிரிவுகளில் போட்டி நடந்தது. இதில் அன்னுார் ஆலன் திலக் கராத்தே பயிற்சி பள்ளி மாணவ, மாணவியர் 12 பதக்கங்கள் வென்றனர். அன்னுாரை சேர்ந்த தக்சா எட்டு வயது தனி நபர் கட்டா பிரிவில் தங்கப் பதக்கம் வென்றார்.ரிதன், திவன்சிகா, தாருகாசினி ஆகியோர் இரண்டாம் இடம் பிடித்து வெள்ளி பதக்கங்கள் வென்றனர்.
கவியுதா, மைத்ரா, லக்சன், சரண், ஸ்ரீநிகில், சஷ்டிகன், சக்திவேல், நந்தகுமார் ஆகியோர் மூன்றாம் இடம் பிடித்து வெண்கல பதக்கம் பெற்றனர்.
பதக்கம் வென்றவர்களுக்கு கராத்தே பள்ளி தலைவர் சந்திரசேகரன், பயிற்சியாளர் ஜெயபாலகிருஷ்ணன் ஆகியோர் பாராட்டு தெரிவித்தனர்.