/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
விடைத்தாள் திருத்தும் பணி: ஒரு மணிநேரம் புறக்கணிப்பு
/
விடைத்தாள் திருத்தும் பணி: ஒரு மணிநேரம் புறக்கணிப்பு
விடைத்தாள் திருத்தும் பணி: ஒரு மணிநேரம் புறக்கணிப்பு
விடைத்தாள் திருத்தும் பணி: ஒரு மணிநேரம் புறக்கணிப்பு
ADDED : ஏப் 06, 2025 01:46 AM
ஆசிரியர்களுக்கான பணிப்பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி, தமிழகம் முழுதும் தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில், நேற்று பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணியை ஒரு மணி நேரம் புறக்கணித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மதுரையில் செயின்ட் மேரிஸ், சிறுமலர் மேல்நிலை பள்ளிகளில் சங்க மாநில பொதுச்செயலர் அன்பழகன் தலைமையில், 100க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் புறக்கணிப்பு போராட்டத்தில் பங்கேற்றனர். இதனால், விடைத்தாள் திருத்தும் பணிகள் பாதித்தன.
இதுகுறித்து அன்பழகன் கூறியதாவது:
ஆசிரியர்கள் மீது தொடரப்படும் வழக்குகள், மாணவர்கள், வெளிநபர்களின் தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன.
இதற்காக ஆசிரியர்களுக்கான பணி பாதுகாப்பு சட்டம் வேண்டும் என, தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். மேலும், பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும், அரசு திட்டங்கள் உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் கிடைக்க வேண்டும், பல ஆண்டுகளாக உயர்த்தப்படாமல் உள்ள உழைப்பூதியம், மதிப்பூதியத்தை உயர்த்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளையும் வலியுறுத்தி வருகிறோம்.
ஆனால், எதுவும் நிறைவேறவில்லை. இதையடுத்து விடைத்தாள் திருத்தும் பணிகளை ஒருமணிநேரம் புறக்கணித்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் அனைத்து மதிப்பீட்டு மையங்களிலும் நடத்தப்பட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.
-நமது நிருபர்-