UPDATED : அக் 08, 2026 12:00 AM
ADDED : அக் 07, 2026 09:54 PM
அ நிறம் | அளவு
சுந்தராபுரம்:ராஜமுத்தையா நகர் அருகே டீச்சர்ஸ் காலனி உள்ளது. இதன் அருகே ரயில்வே குடியிருப்பு காம்பவுண்ட் சுவர் அருகே குடியிருப்புகள் உள்ளன. இதனருகே கல்யாணசுந்தரம், 70 என்பவர் தனது குடும்பத்துடன் வசிக்கிறார். சம்பவத்தன்று இவர் வீட்டிற்கு காரில் வரும்போது, அங்கிருந்த துளசி என்பவருடன் வாக்குவாதம் ஏற்பட்டது.
சுந்தராபுரம் போலீசில் துளசி கொடுத்த புகார் மனுவில், தன்னை ஜாதி பெயர் கூறி திட்டியதாக குறிப்பிட்டார். போலீசார் கல்யாணசுந்தரம் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்தனர்.
