/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
புகையிலை எதிர்ப்பு உறுதிமொழியேற்பு
/
புகையிலை எதிர்ப்பு உறுதிமொழியேற்பு
ADDED : அக் 29, 2024 11:39 PM

ஆனைமலை : ஆனைமலையில், புகையிலை எதிர்ப்பு விழிப்புணர்வு மற்றும் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.
ஆனைமலை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில், புகையிலை எதிர்ப்பு உறுதிமொழி ஏற்பு மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி, ஆனைமலை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது.
புகையிலை கட்டுப்பாட்டு மைய ஒருங்கிணைப்பாளர் டாக்டர் சரண்யாதேவி, மாணவர்களுக்கு புகையிலை பயன்பாட்டால் ஏற்படும் தீமைகள் குறித்து விளக்கியதுடன், அவற்றை பயன்படுத்த வேண்டாம் என அறிவுறுத்தினார்.
தொடர்ந்து, புகையிலை பயன்படுத்த மாட்டோம் என உறுதிமொழி எடுக்கப்பட்டது. வட்டார மருத்துவம் சாரா மேற்பார்வையாளர் செல்லத்துரை, சுகாதார ஆய்வாளர்கள் கார்த்திக், ஜெயப்பிரதாப், நந்தா, கார்த்தி மற்றும் பள்ளி தலைமையாசிரியர், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.