/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வள்ளிகும்மி பெண்களை அவமதித்த நபரின் முன்ஜாமின் மனு 'டிஸ்மிஸ்'
/
வள்ளிகும்மி பெண்களை அவமதித்த நபரின் முன்ஜாமின் மனு 'டிஸ்மிஸ்'
வள்ளிகும்மி பெண்களை அவமதித்த நபரின் முன்ஜாமின் மனு 'டிஸ்மிஸ்'
வள்ளிகும்மி பெண்களை அவமதித்த நபரின் முன்ஜாமின் மனு 'டிஸ்மிஸ்'
ADDED : மார் 17, 2025 01:04 AM
கோவை; கோவையில், வள்ளிகும்மி குழுவிலுள்ள பெண்களை அவமதித்து பேசிய நபரின் முன்ஜாமின் மனு 'டிஸ்மிஸ்' செய்யப்பட்டது.
தொண்டாமுத்துார் அருகேயுள்ள கெம்பனுாரில் முன்னாள் முதல்வர் ஜெ., பிறந்த தினத்தை முன்னிட்டு, கடந்த 24ம் தேதி, குளத்துபாளையம் பகுதியை சேர்ந்த, 75 பெண்கள் பங்கேற்ற வள்ளிகும்மி குழுவினர் நடனம் நடந்தது.
நடனமாடியபெண்களை, குபேரபுரி பகுதியை சேர்ந்த பாபு என்பவர் அவமரியாதையாக பேசியிருக்கிறார். அக்குழுவில் இடம்பெற்ற இந்திராணிநேரில் சென்று பாபுவிடம் தட்டி கேட்ட போது, அவரை தகாத வார்த்தையால் திட்டி அவமானப்படுத்தினார்.
புகாரின் பேரில் தொண்டாமுத்துார் போலீசார், பாபு மீது, பெண்கள் மீதான வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்துதேடி வந்தனர்.
இந்நிலையில், முன்ஜாமின் கேட்டு, கோவை மாவட்ட செஷன்ஸ் கோர்ட்டில் பாபு மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை, 'டிஸ்மிஸ்' செய்து நீதிபதி விஜயா உத்தரவிட்டார்.