/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
எதையும் அறிவியல் ரீதியாக அணுக வேண்டும்! கண்காட்சியில் அறிவுரை
/
எதையும் அறிவியல் ரீதியாக அணுக வேண்டும்! கண்காட்சியில் அறிவுரை
எதையும் அறிவியல் ரீதியாக அணுக வேண்டும்! கண்காட்சியில் அறிவுரை
எதையும் அறிவியல் ரீதியாக அணுக வேண்டும்! கண்காட்சியில் அறிவுரை
ADDED : அக் 28, 2024 11:44 PM

பொள்ளாச்சி : பொள்ளாச்சி மகாலிங்கம் பொறியியல் கல்லுாரி மற்றும் தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றம் சார்பில், பள்ளி மாணவர்களுக்கான அறிவியல் கண்காட்சி கல்லுாரி வளாகத்தில் நடந்தது. கல்லுாரி முதல்வர் கோவிந்தசாமி வரவேற்றார். என்.ஐ.ஏ., கல்வி நிறுவனங்களின் செயலாளர் ராமசாமி முன்னிலை வகித்தார்.
பெங்களூரு ராணுவம், விமான தகுதி மற்றும் சான்றிதழ் மைய பாதுகாப்பு ஆராய்ச்சி, மேம்பாட்டு நிறுவன உறுப்பினர் செந்தில்குமார் கூறியதாவது:
சமீப ஆண்டுகளாக, தமிழகம் கல்வியில் முன்மாதிரியாக திகழ்கிறது. புத்தகங்களில் இருந்து கற்றுக்கொள்வதை மாணவர்கள் பயன்படுத்த வேண்டும். வெற்றிகரமான புதுமையான திட்டங்களுக்கு செயல்பாட்டு தேவைகளில் கவனம் செலுத்த வேண்டும்.
ஒரு திட்டம் முழுவதும் சரிபார்ப்பு, ஆவணங்களை கண்காணிக்க வேண்டும். சுற்றியுள்ள அனைத்தும் அறிவியலுடன் இணைக்கப்பட்டுள்ளன. அதை அறிவியல் ரீதியாக அணுக வேண்டும். கல்வி அனைவருக்கும் அணுகக்கூடியது மற்றும் தனிப்பட்ட மாற்றத்திற்கான சக்திவாய்ந்த கருவியாகும். இவ்வாறு, பேசினார்.
மாவட்ட கல்வி அலுவலர் மகேஸ்வரி, கல்லுாரி டீன் செந்தில்குமார் மற்றும் பலர் பங்கேற்றனர்.
கண்காட்சியில், அறிவியல், சமூகம், சுற்றுச்சூழல், விவசாயம், உணவு பாதுகாப்பு, பேரிடர் மேலாண்மை, கணிதம் மற்றும் வாழ்க்கை, சுகாதாரம், ஆற்றல் பாதுகாப்பு என பல தலைப்புகளில், மாணவர்களின் படைப்புகள் காட்சிபடுத்தப்பட்டன.
9, 10ம் வகுப்பு மாணவர்கள், பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்கள் என, இரு பிரிவுகளின் கீழ் கண்காட்சி நடத்தப்பட்டது. முதல் பிரிவின் கீழ், 441 மாணவர்களை உள்ளடக்கிய, 128 அணிகள் பங்கேற்றன.
இரண்டாவது பிரிவில், 84 குழுக்களுடன், 278 மாணவர்கள் பங்கேற்றனர். மொத்தம், 53 பள்ளிகளை சேர்ந்த, 719 மாணவர்கள் கண்காட்சியில் பங்கேற்றனர்.