தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ அடுக்குமாடி வீடு வாங்குபவர்கள் ஆவணங்கள் விஷயத்தில் ‘அலர்ட்’

அடுக்குமாடி வீடு வாங்குபவர்கள் ஆவணங்கள் விஷயத்தில் ‘அலர்ட்’

அடுக்குமாடி வீடு வாங்குபவர்கள் ஆவணங்கள் விஷயத்தில் ‘அலர்ட்’


ADDED : செப் 18, 2026 06:12 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 18, 2026 06:12 PM


Follow on Google
அ நிறம் | அளவு

அடுக்குமாடி வீடு வாங்க முடிவு செய்துவிட்டால் பல விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும் என்கிறார், கோயம்புத்துார் சிவில் இன்ஜினியர்கள் சங்க(கொசினா) உறுப்பினர் மாரிமுத்துராஜ்.

அவர் நம்மிடம் பகிர்ந்துகொண்டதாவது...

மனை மூலப்பத்திரத்தின் ‘ஒரிஜினல்’ யார் பெயரில் இருந்தது, யார் பெயருக்கு சொத்து மாறியது, கட்டடம் யார் கட்டிக்கொடுத்தது, லே–அவுட் மற்றும் பிளான் அப்ரூவல் வாங்கியிருக்கிறார்களா ஆகிய கேள்விகளை எழுப்பி அதற்கான விடைகளை அடைய வேண்டும்.

மின் கட்டண இணைப்பு, குடிநீர் இணைப்பு யார் பெயரில் இருக்கிறது. வீடு கட்டும்போது கட்டணங்கள் எதுவும் நிலுவையில் உள்ளனவா என்பதை கவனிக்க வேண்டும். அதை உங்கள் பெயரில் மாற்றிக்கொள்ளவும் வீடு வாங்கும்போதே நடவடிக்கை தேவை.

பின்னர் பார்த்துக்கொள்ளலாம் என்று விட்டுவிட்டால் ‘பில்டர்’ அவர் வேலையை பார்த்துக்கொண்டு போய்விடுவார்; பின்னர் அலைச்சல்தான்.

அடுக்குமாடி வீட்டில் பிரிக்கப்படாத மனை என்றழைக்கப்படும் யு.டி.எஸ்., மனை சரியாக பிரிக்கப்பட்டிருக்கிறதா என்பதை மதிப்பீடு செய்வதே நல்லது.

கட்டுனர் சொல்வதை கேட்டு அப்படியே விட்டுவிட்டால், 20 ஆண்டுகள் கழித்து அடுக்குமாடியை வேறொருவரிடம் விற்க எல்லா பிளாட் உரிமையாளர்களும் முடிவு செய்தால், அப்போது யு.டி.எஸ்., வித்தியாசம் காரணமாக உங்களுக்கு இழப்பு ஏற்படும்.

அடுக்குமாடி வீட்டில் அனைத்து தளங்களுக்கும் கட்டட அனுமதி பெறப்பட்டிருக்கிறதா என ஆவணங்களை சரிபார்த்து உறுதிபடுத்திக்கொள்வது நல்லது. சில சமயம் இரண்டு அல்லது மூன்று அடுக்கு மாடி வீடு கட்ட அனுமதி பெற்று, கூடுதலாக ஒரு மாடி கட்டியிருப்பார்கள்; கட்டட விதிமீறலாக அமைந்துவிடும்.

சிலர் அசல் பத்திரத்தை வங்கியில் அடமானம் வைத்து இருப்பார்கள். ஆனால், பத்திரப்பதிவு அலுவலகத்தில் ‘டூப்ளிகேட்’ பத்திரம் வாங்கி விற்பார்கள். எனவே, எந்த சொத்து ஆக இருந்தாலும் அசல் பத்திரத்தை கண்ணால் பார்த்தபிறகு முடிவு எடுப்பதே பாதுகாப்பானது.

இவ்வாறு, அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us