/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அபார்ட்மென்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப்; தெறிக்க விட்டு கெத்து காண்பித்த அணிகள்
/
அபார்ட்மென்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப்; தெறிக்க விட்டு கெத்து காண்பித்த அணிகள்
அபார்ட்மென்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப்; தெறிக்க விட்டு கெத்து காண்பித்த அணிகள்
அபார்ட்மென்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப்; தெறிக்க விட்டு கெத்து காண்பித்த அணிகள்
ADDED : செப் 30, 2025 12:50 AM

கோவை; கோவையில் நடந்த, 'அபார்ட்மென்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் 2025' போட்டியில், அணி வீரர்கள் சிறப்பாக விளையாடி, திறமையை வெளிக்காட்டினர்.
'தினமலர்' நாளிதழின், பவள விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, போட்டி நடத்தப்படுகிறது. நவ இந்தியா இந்துஸ்தான் கல்லுாரி, சி.ஐ.டி., கல்லுாரி, சங்கரா கல்லுாரி, காளப்பட்டி என்.ஜி.பி., கல்லுாரி மைதானங்களில், 'நாக் அவுட்' முறையில், டென்னிஸ் பந்து கொண்டு, 10 ஓவர் போட்டி நடத்தப்பட்டது.
இந்துஸ்தான் கல்லுாரி இந்துஸ்தான் கல்லுாரியில் நடந்த முதல் போட்டியில், ஸ்பார்ட்டன் லெவன் மற்றும் பி.ஜி.பி., அணிகள் மோதின. பி.ஜி.பி., அணி 91 ரன்கள் எடுத்தது. அடுத்து விளையாடிய ஸ்பார்ட்டன் அணி 41 ரன் மட்டுமே எடுத்தது. பி.ஜி.பி., அணியின் பாரதி, ஆட்ட நாயகனாக அறிவிக்கப்பட்டார்.
இரண்டாவது ஆட்டத்தில், அறம் யங் இந்தியா மற்றும் பீட்டல் கிரிக்கெட் கிளப் அணிகள் மோதின. அறம் அணி 90 ரன் எடுக்க, சளைக்காமல் ஆடிய பீட்டல் அணி, 92 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அணியின் சரவணகுமார் 30 ரன் எடுத்து ஆட்ட நாயகனாக பரிசு பெற்றார்.
மூன்றாவது போட்டியில், பி.ஜி.பி., லெவன்ஸ் மற்றும் ரமணி கோசி டவர்ஸ் அணிகள் மோதியதில், முதலில் ஆடிய பி.ஜி.பி., அணி 124 ரன் எடுத்து அதிரடி காட்டியது. பின்னர் ஆடிய ரமணி கோசி டவர்ஸ் அணி, 66 ரன் மட்டுமே எடுத்தது. பி.ஜி.பி., அணியின் மனோஜ் 66 ரன் எடுத்து ஆட்ட நாயகன் விருது பெற்றார்.
நான்காவது போட்டியில், பீட்டல் கிரிக்கெட் கிளப் மற்றும் ஆர்.ஆர்.சாய் அபினவ் அணிகள் மோதின. பீட்டல் அணி 37 ரன் எடுத்தது. சாய் அபினவ் அணி 38 ரன் எடுத்து வெற்றி பெற்றது. அணியின் விக்னேஷ் ஆட்ட நாயகனாக தேர்வு பெற்றார்.
சி.ஐ.டி., மைதானம் சி.ஐ.டி., மைதானத்தில், முதல் போட்டியில் டெய்சி ஸ்டார் மற்றும் பாம் க்ரோவ் டைகர் அணிகள் மோதின. டெய்சி ஸ்டார் அணி ஏழு விக்கெட் இழப்புக்கு 51 ரன் எடுத்தது. பாம் க்ரோவ் அணி 53 ரன் எடுத்து வென்றது. இந்த அணியை சேர்ந்த திருமுகம், ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
இரண்டாவது ஆட்டத்தில், ஸ்ரீ வள்ளலார் வாரியர்ஸ், ஆர்.எல்.ஜி., கிரிக்கெட் டீம் விளையாடின. ஆர்.எல்.ஜி., அணி, மூன்று விக்கெட் இழப்புக்கு 58 ரன் எடுத்தது. அணி வீரர் வெங்கட் 33 ரன்கள் எடுத்தார். ஸ்ரீ வள்ளலார் அணி, 6.3 ஓவரில் 59 ரன்கள் எடுத்து வென்றது. ஆட்டநாயகனாக புஷ்பராஜ் தேர்வு செய்யப்பட்டார்.
மூன்றாவது ஆட்டத்தில், ஹோப்ஸ் லெவன் மற்றும் பாம் க்ரோவ் டைகர்ஸ் அணிகள் மோதின. ஹோப்ஸ் அணி 89 ரன் எடுத்தது. பாம் க்ரோவ் அணி, 83 ரன் எடுத்து தோல்வியை தழுவியது. ஹோப்ஸ் அணியின் தருண், 31 ரன் எடுத்து ஆட்ட நாயகனாக அறிவிக்கப்பட்டார்.
நான்காவது ஆட்டத்தில், ஸ்ரீ வள்ளலார் வாரியர்ஸ் மற்றும் ஆர்.ஆர்.துரியா அணிகள் மோதின. முதலில் விளையாடிய ஸ்ரீ வள்ளலார் வாரியர்ஸ் அணி, ஐந்து விக்கெட் இழப்புக்கு 73 ரன் எடுத்தது.
இரண்டாவதாக விளையாடிய ஆர்.ஆர்.துரியா அணி, 9.1 ஓவரில் 77 ரன் எடுத்து வெற்றி பெற்றது. ஆட்ட நாயகன் விருதை, இந்த அணியின் சித்தார்த் வென்றார்.
அக்., 2 மற்றும் 4ம் தேதிகளில் போட்டிகள் நடக்கின்றன. இறுதிப் போட்டி அக்.4ல் சி.ஐ.டி., கல்லுாரி மைதானத்தில் நடக்கிறது. முதல் பரிசாக ரூ.25 ஆயிரம் மற்றும் கோப்பை, இரண்டாம் பரிசாக ரூ.15 ஆயிரம் மற்றும் கோப்பை, மூன்றாம் பரிசாக ரூ.10 ஆயிரம் மற்றும் கோப்பை வழங்கப்படுகிறது.
'தினமலர்' நாளிதழ், 'பெடரேஷன் ஆப் கோயம்புத்துார் அபார்ட்மென்ட் அசோசியேஷன்ஸ்' சார்பில், 'அபார்ட்மென்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப்' போட்டி நடந்தது. எஸ்.எஸ்.வி.எம்., கல்வி குழுமம், 'வால்ரஸ்' மற்றும் 'ஸ்போர்ட்ஸ் லேண்ட் ஆகியவை, கோ -ஸ்பான்சர்களாக கரம் கோர்த்துள்ளன.