/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அக்கறையற்ற கான்ட்ராக்டர்கள் சொந்த வீட்டில் சிறை! தோண்டாமல் போடுறாங்க ரோடு கொஞ்சமும் திறக்க முடியலை வீடு
/
அக்கறையற்ற கான்ட்ராக்டர்கள் சொந்த வீட்டில் சிறை! தோண்டாமல் போடுறாங்க ரோடு கொஞ்சமும் திறக்க முடியலை வீடு
அக்கறையற்ற கான்ட்ராக்டர்கள் சொந்த வீட்டில் சிறை! தோண்டாமல் போடுறாங்க ரோடு கொஞ்சமும் திறக்க முடியலை வீடு
அக்கறையற்ற கான்ட்ராக்டர்கள் சொந்த வீட்டில் சிறை! தோண்டாமல் போடுறாங்க ரோடு கொஞ்சமும் திறக்க முடியலை வீடு
UPDATED : பிப் 05, 2024 02:16 AM
ADDED : பிப் 05, 2024 01:23 AM

-நமது நிருபர்-
கோவை நகரில், மீண்டும் ரோட்டைத் தோண்டாமல் சீரமைத்த காரணத்தால், கதவைத் திறக்க முடியாமல், வீட்டுக்குள் இருந்தே வண்டியை எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
கோவை மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு வார்டுகளிலும், ரோடுகளைச் சீரமைக்கும் பணி நடந்து வருகிறது.
நகருக்குள் ஏற்கனவே பல பகுதிகளில், வீடுகள், கடைகளை விட, ரோடுகள் மேடாக இருப்பதால், மக்கள் பல விதமான பாதிப்புகளுக்கு உள்ளாகி வருகின்றனர்.
இதன் காரணமாக, மழைக்காலங்களில், சாக்கடைத் தண்ணீர், வீடுகளுக்குள் புகுந்து விடும் அவலம் தொடர்ந்து வருகிறது.
ரோடு மீது ரோடு போடுவதால், ஏற்படும் பாதிப்புகளைக் குறிப்பிட்டு, ஐகோர்ட் பல உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது. அதன் அடிப்படையில் தமிழக அரசும் முக்கியமான அறிவுறுத்தலையும் வழங்கியுள்ளது.
அதாவது, ரோட்டின் உயரம் அதிகமாகாத வகையில், ரோடுகளைச் சீரமைப்பதற்கு முன்பு, அவற்றின் மேற்பாகத்தை ஒரே சீராக அகற்றி, 'மில்லிங்' செய்ய வேண்டுமென்று அரசு உத்தரவிட்டுள்ளது.
கோவை நகரில், முறையாக 'மில்லிங்' செய்யாமல், ரோடு சீரமைப்புப் பணிகளை மேற்கொண்ட கான்ட்ராக்டர்கள் பலருக்கு, மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் அபராதம் விதித்துள்ளார்.
ஆனாலும், இப்போதும் 'மில்லிங்' செய்யாமல், ரோட்டின் உயரம் திடீரென அதிகமாகும் வகையில், ரோடு சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவது தொடர்கிறது.
கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்துக்கு உட்பட்ட 47வது வார்டில், விஸ்வநாதபுரம் பகுதியில், பழைய ரோட்டைப் பெயர்த்தெடுத்து, 'மில்லிங்' செய்யாமல், ரோடு சீரமைக்கும் பணி நடந்து வருகிறது.
இதனால், அரை அடி முதல் முக்கால் அடி வரை, ரோடு உயரமாகியுள்ளது. பல வீடுகளின் காம்பவுண்ட் 'கேட்'களைத் திறக்கவே முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
கதவைத் திறக்க முடியாததால், பல வீடுகளிலிருந்து வண்டிகளை வெளியே எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
ஐகோர்ட் உத்தரவு, அரசு அறிவுறுத்தலை அப்பட்டமாக மீறி, ரோட்டின் உயரத்தை அதிகப்படுத்தியுள்ள கான்ட்ராக்டர் மீது நடவடிக்கை எடுப்பதோடு, ரோட்டின் உயரத்தைக் குறைக்க வேண்டுமென்று, விஸ்வநாதபுரம் குடியிருப்போர் நலச்சங்க நிர்வாகிகள், கோரிக்கை விடுத்துள்ளனர்.

